ஐயோ சிரிச்சி முடியல.! ஹிந்தி சேனலுக்கு சென்று செம்ம அலப்பறை செய்த பொன்னியின் செல்வன் டீம்

பொன்னியின் செல்வன் படக்குழுவினர் வடநாட்டில் பிரபலமாக இருக்கும் கபில் ஷர்மா நிகழ்ச்சிக்கு சென்று அங்கு ஒரு விளையாட்டு விளையாடி இருக்கின்றனர். அந்த க்யூட் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. படம் வெளியாகி நான்கு நாட்களில் 200 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து இருக்கிறது. இது தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஓபனிங் கொடுத்த வலிமை, விக்ரம் போன்ற படங்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. மேலும் வார இறுதி நாட்கள், ஆயுத பூஜை விடுமுறை என விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படத்திற்கான வசூல் மேலும் பல கோடிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போது வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டும் வருகிறது.

ஐயோ சிரிச்சி முடியல.! ஹிந்தி சேனலுக்கு சென்று செம்ம அலப்பறை செய்த பொன்னியின் செல்வன் டீம் 1

விளம்பரம்

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சமீபத்தில் சென்று தியேட்டரில் படத்தை பார்த்தனர். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பொன்னியின் செல்வன் டீம் வடநாட்டிற்கு சென்று இருந்தனர். அங்கு மிகப் பிரபலமாக இருக்கும் கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் இந்த குழு பங்கேற்றது. விக்ரம், திரிஷா, கார்த்திக், ஜெயம் ரவி, ஷோபிதா உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பல விஷயங்களை படக்குழு பகிர்ந்து கொண்டது.மேலும் சில விளையாட்டுகளையும் விளையாடினர்.

விளம்பரம்

அதில் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு ஒருவர் சொல்வதைக் கேட்டு அப்படியே பிறரிடம் சொல்ல வேண்டும். ஹிந்தியில் இந்த வார்த்தைகளை கேட்ட இவர்கள் தப்பு தப்பாக மற்றவர்களிடம் கூறினர். பார்ப்பதற்கே மிக காமெடியாக இருந்த அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: SET India

விளம்பரம்

Leave a Comment