பவானிசாகர் அணையில் நீர்வரத்து குறைந்ததுள்ளது!!

பவானிசாகர் அணையில் நீர்வரத்து குறைந்ததுள்ளது!! 1

மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சில தினங்களாக அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது.

இந்நிலையில் நேற்று வினாடிக்கு 4,721 கனஅடியாக இருந்தது நீர்வரத்து. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று வினாடிக்கு 3316 கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும் அணையின் நீர்மட்டம் 105 அடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

விளம்பரம்

அணையில் தற்போது 32.8 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. மேலும் அணையில் இருந்து பவானி ஆற்றிற்கு திறக்கப்படும் நீரின் அளவு 4,720 கனஅடியில் இருந்து 3,300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment