சமீபத்தில் பிறந்த தனது மகளின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட kpy நவீன்.! குவியும் வாழ்த்துக்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நவீன். காமெடி, உடல் மொழி, மற்றும் மிமிக்ரியில் அசத்தும் நவீனுக்கு கலக்கப்போவது யாரு டைட்டில் கிடைக்கும் என்று எண்ணியிருந்த நிலையில் அவருக்கு அது கிடைக்காமல் போனது. இருந்த போதிலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பாவம் கணேசன் என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன். நவீன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்அறிவித்து இருந்தார் இந்த நிலையில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சமீபத்தில் பிறந்த தனது மகளின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட kpy நவீன்.! குவியும் வாழ்த்துக்கள் 1

விளம்பரம்

நவீனுக்கு 2016ம் ஆண்டு திவ்யா லெட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தே வந்தனர். அதற்கு காரணம் நவீன் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருந்தார். இதை அறிந்த திவ்யலெட்சுமி நவீன் பற்றி போலீசில் புகார் கொடுத்தார். இதனால் சில காலம் சிறையில் இருந்த அவர் ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் கிருஷ்ணகுமாரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிருஷ்ண குமாரி, உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது, நீங்க சீக்கிரமே பிரிஞ்சிடுவீங்க என்று பலர் சாபம் விட்டனர், ஆனால் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். இதை பார்த்த நவீனும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

தொடர்புடையவை  கம்பெனியை அர்ஜுனுக்கு தாரை வார்க்க முடிவெடுத்த கோதை.?? அதிர்ச்சியில் உறைந்த கார்த்திக்.!

சமீபத்தில் பிறந்த தனது மகளின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட kpy நவீன்.! குவியும் வாழ்த்துக்கள் 3

விளம்பரம்

 

சாபம் எல்லாம் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் கர்ப்பமான தனது மனைவிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தினார் நவீன். இதில் விஜய் டிவியின் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர். நவீன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். நவீனின் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சாபம் எல்லாம் பொய் என்பதை மீண்டும் நிரூபித்த தருணம். இந்த நிலையில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார் நவீன்.

விளம்பரம்

சமீபத்தில் பிறந்த தனது மகளின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட kpy நவீன்.! குவியும் வாழ்த்துக்கள் 5

விளம்பரம்

Leave a Comment