அமீர், பாவனி, நிரூப்புடன் சேர்ந்து ஊட்டியில் செம்ம அலப்பறை செய்த பிரியங்கா.! Looty in Ooty

விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக வலம் வரும் ஒரு நபர் என்றால் அது பிரியங்கா தான். 13 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் இன்று வரை விஜய் டிவியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி கொண்டுள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்துடன் இணைந்து பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது தனது பிக்பாஸ் நண்பர்கள் அமீர், நிரூப், பாவனியுடன் சேர்ந்து ஊட்டிக்கு சென்றுள்ள வீடியோவை பிரியங்கா தனது youtube பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அமீர், பாவனி, நிரூப்புடன் சேர்ந்து ஊட்டியில் செம்ம அலப்பறை செய்த பிரியங்கா.! Looty in Ooty 1

விளம்பரம்

மக்கள் மத்தியில் செல்வாக்கான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவராகவும். அந்த சீசனில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே என்னும் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் செய்யும் காமெடி குறும்பு வீடியோக்களை அதில் பதிவேற்றி வருகிறார். பிக்பாஸ்ஸில் இருந்த போது நிரூப், அமீர், பாவனி ஆகிய நால்வரும் மிக நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். பிக்பாஸ் முடிந்த பின்னரும் அவர்கள் ஹைதராபாத் வெளிநாடு என பல இடங்களுக்கு நால்வரும் சேர்ந்து சுற்றுலா சென்று வந்ததை வீடியோக்களாக பதிவிட்டிருந்தனர்.

தொடர்புடையவை  எல்லாமே சரியா இருக்குன்னா அப்போ அங்க எதோ தப்பு இருக்கு.! சரவணனை கையும் களவுமாக பிடிக்கும் சந்தியா.!

அமீர், பாவனி, நிரூப்புடன் சேர்ந்து ஊட்டியில் செம்ம அலப்பறை செய்த பிரியங்கா.! Looty in Ooty 3

விளம்பரம்

இந்த நிலையில் இன்று பிரியங்கா ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மீண்டும் இந்த நால்வரும் இணைந்து சென்னையிலிருந்து ஊட்டிக்கு செல்கின்றனர். அங்கு மூன்று வேலையும் சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்து, மீண்டும் சாப்பிடுவது தூங்குவது என்று வேறு எங்கும் செல்லாமல் அறையிலேயே இருந்துவிட்டு திருப்பி சென்னைக்கு கிளம்பி விடுகின்றனர். மிக காமெடியாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Priyanga Deshpande

விளம்பரம்

Leave a Comment