ஐ லவ் யூ டி பொண்டாட்டி.! ஸ்னேகாவின் 42வது பிறந்த நாளில் Cute ஆக வாழ்த்திய பிரசன்னா. !

நடிகை சினேகா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருடைய கணவர் பிரசன்னா சினேகாவிற்கு அழகிய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். மலையாளத்தில் “இங்ஙன ஒரு நீலபக்ஷி” என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் சினேகா. பின்னர் என்னவளே என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது ஆனந்தம் திரைப்படம் தான். இந்த படத்தில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலின் மூலமாக புகழ்பெற்றார். இதற்காக அவருக்கு தமிழ்நாடு அரசின் விருது கூட கிடைத்துள்ளது. தொடர்ந்து புன்னகை தேசம், உன்னை நினைத்து, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார் சினேகா.

ஐ லவ் யூ டி பொண்டாட்டி.! ஸ்னேகாவின் 42வது பிறந்த நாளில் Cute ஆக வாழ்த்திய பிரசன்னா. ! 1

விளம்பரம்

 

2009 ஆம் ஆண்டு “அச்சமுண்டு அச்சமுண்டு” என்ற படத்தில் நடிகர் பிரசன்னா உடன் இணைந்து நடித்தார் சினேகா. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் அதை வதந்தியென மறுத்திருந்தார் சினேகா. பின்னர் 2011 ஆம் ஆண்டு இருவரும் தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர் உடல் எடை ஏறி காணப்பட்ட சினேகா தீவிரமாக உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கிறார். இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலருக்கும் முன் உதாரணமாக, இன்பிரேஷனாக இருந்து வருகிறது. மேலும் வரலட்சுமி பூஜை, நவராத்திரி பூஜை என வீட்டில் நடக்கும் அனைத்து பூஜைகளையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகை சினேகா.

விளம்பரம்
தொடர்புடையவை  அமெரிக்கா செல்லும் முன் பேட்டி அளித்த T.R..உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி..கை எடுத்து கும்பிட்டு கதறி அழுத T.R

ஐ லவ் யூ டி பொண்டாட்டி.! ஸ்னேகாவின் 42வது பிறந்த நாளில் Cute ஆக வாழ்த்திய பிரசன்னா. ! 3

சாமி அலங்காரங்களை தனது கையால் செய்து அதை வீடியோவாக எடுத்து தனது ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகிறார். இன்று அவருக்கு 42 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதற்காக அவரது கணவர் பிரசன்னா இன்ஸ்டாகிராமில் ஒரு அழகிய வீடியோக்களை பகிர்ந்து வாழ்த்து செய்தியை கூறியிருக்கிறார். அதில் நான் எப்பவும் உன்னை தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன், உன்னுடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன், இப்படியே நாம் இருவரும் வயது மூப்படைவோம். இன்று மட்டும் உன்னை நான் கொஞ்சம் குறைவாக தொந்தரவு செய்வேன். ஏனென்றால் இது உனக்கு ஸ்பெஷல் நாள் உன்னுடைய பிறந்தநாள் லவ் யூ கண்ணம்மா என்று பதிவிட்டு இருக்கிறார். சினேகாவிற்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கமெண்டில் கூறி வருகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment