PS-1 படத்துக்காக தான் வரைந்த ஓவியங்களை முதல் முறையாக காட்டிய தோட்டா தரணி.!

பொன்னியின் செல்வன் படத்திற்காக எவ்வாறு செட் அமைக்கப்பட்டது என்பது குறித்து தோட்டா தரணி தன்னுடைய வரைபடங்களை காட்டி விளக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் கலை வடிவமைப்பாளராக வெகு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் தோட்டாத் தரணி. இவர்தான் இந்த பொன்னியின் செல்வன் படத்திற்க்கும் கலை வடிவமைப்பாளராக வேலை பார்த்திருக்கிறார். 1950 ஆம் ஆண்டுகளில் ஒரு வார பத்திரிக்கையில் வெளியான கதை தான் பொன்னியின் செல்வன். திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் ஆட்சி செலுத்திய சோழ மன்னர்கள் எவ்வாறு சிங்கப்பூர், மலேசியா வரை படையெடுத்து சென்று ஆட்சியைப் பிடித்தார்கள் என்றும், மேலும் கங்கை வரை படையெடுத்துச் சென்று எப்படி வட இந்தியாவையும் கைப்பற்றினார்கள் என்பதும் குறித்த கதை தான் பொன்னியின் செல்வன். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

PS-1 படத்துக்காக தான் வரைந்த ஓவியங்களை முதல் முறையாக காட்டிய தோட்டா தரணி.! 1

விளம்பரம்

PS-1 படத்துக்காக தான் வரைந்த ஓவியங்களை முதல் முறையாக காட்டிய தோட்டா தரணி.! 3

சோழ தேசத்தின் அரியணைக்கு வந்த ஆபத்தையும், அந்த ஆபத்திலிருந்து அரியணையை எவ்வாறு சோழ மன்னர்கள் காத்தார்கள் என்பது பற்றிய கதையை, சில புனைவு கதாபாத்திரங்களோடு மிக அழகாக எழுதி இருப்பார் கல்கி. இந்த கதையை படமாக்க வேண்டும் என்று எம்ஜிஆர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என பலர் முயற்சித்து இறுதியில் தோற்றுப் போயினர். தற்போது இந்த படத்தை மணிரத்னம் இயக்கி சாதனை புரிந்திருக்கிறார். மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. வெளியான 10 நாட்களில் 300 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி குவித்து இருந்தது இந்த படம்.இன்று வரை பல தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி கொண்டிருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  பல முன்னணி நடிகர்களின் முதல் நாள் வசூலை ஓரம் கட்டிய பாபா.! கோடிகளை தொட்டு சாதனை.!

PS-1 படத்துக்காக தான் வரைந்த ஓவியங்களை முதல் முறையாக காட்டிய தோட்டா தரணி.! 5

PS-1 படத்துக்காக தான் வரைந்த ஓவியங்களை முதல் முறையாக காட்டிய தோட்டா தரணி.! 7

விளம்பரம்

இந்த நிலையில் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் செட்டுகள், மண்டபங்கள், ஆயுதங்கள் இவையெல்லாம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கும் ஒரு பேட்டியை தோட்டா தரணி விளக்கியுள்ளார். அதில் கப்பல் காட்சிகளுக்கு அவர் வரைந்த ஓவியங்களை எல்லாம் காட்டினார். பார்க்கவே மிக அழகாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Cinema Vikatan

விளம்பரம்

Leave a Comment