பிக்பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி மிகப்பிரமாண்டமாக துவங்கப்பட்டது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு 20 பேரை கொண்டு இந்த சீசன் துவங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கி வருகிறார். வெளிநாடுகளில் ஒளிபரப்பான பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். விஜய் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை, 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் ஒளிபரப்பி வருகின்றனர். இந்த சீசனில் முன் எப்போதும் போல் இல்லாமல் சாமானிய மக்களிலிருந்து இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

முதல் எபிசோடிலேயே பிக்பாஸ் பல டாஸ்க்களை கொடுத்தார். குறிப்பாக பஸ்ஸர் அடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பஸ்ஸரை ஹவுஸ்மேட்ஸ் நிறுத்தும் வரை வீட்டில் ஆங்காங்கே குப்பை கொட்டுகிறது. இந்த டாஸ்கை ஒவ்வொருவரும் தனித்தனியாக விளையாடும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக பெரும் மதிப்பெண்களைக் கொண்டு லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்களைப் பெற முடியும். முன்பெல்லாம் குழுவாக விளையாடி லக்ஸரி பட்ஜெட் பெற்று அந்த மதிப்பெண்களுக்கு ஏற்ப உணவுகளை பெற்றுக் கொள்வார்கள். இந்த முறை அந்த மாதிரி கிடையாது. தனித்தனியாக விளையாடி அவர்கள் பெரும் மதிப்பெண் கொண்டு உணவை சேகரித்துக் கொள்ள வேண்டும். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் ஜிபி முத்துவை தாக்கும் விதமாக ஜனனி எதோ சொல்கிறார். அதற்கு பதில் அளித்து கொண்டிருக்கும் போது தனலட்சுமி எதோ சொல்ல இருவருக்கும் சண்டை முற்றுகிறது. ஜிபி முத்துவை பார்த்து பயங்கரமாக கத்துகிறார் தனலட்சமி. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television