சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் படத்தின் 3வது பாடல் Who am i பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களான அது இது எது, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் ஒரு மிமிக்ரி கலைஞர் ஆவார். விஜய் டிவியில் இருந்த போது ஜோடி நம்பர் ஒன்னில் ஒரு சீசனில் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தார். பின்னர் இவருக்கு வெள்ளித் திரையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.

பின்னர் அவர் எதிர்நீச்சல், மான்கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் பிரின்ஸ், அயலான் போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதில் பிரின்ஸ் திரைப்படம் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் கே வி அனுதீப் இயக்கியிருக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். மேலும் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. சிவகார்த்திகேயன் படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல் முறை. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான who am i பாடல் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: aditya music tamil