சரிகா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! நீண்ட நாளுக்கு பின் திரையில் ரீ என்ட்ரி கொடுத்த சரிகா.!

கொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாக சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்த கமலஹாசனின் இரண்டாவது மனைவி சரிகாவிற்கு, படத்தில் நடிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அவர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரைத்துறைக்கு திரும்புகிறார் சரிகா. உலக நாயகன் கமல் பற்றிய அறிமுகமே தேவையில்லை. அவர் தமிழுக்கு திரையுலகுக்கு மட்டுமல்ல, உலகத் திரைக்கே நாயகனாக விளங்கி வருகிறார். உலகநாயகன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விக்ரம். இந்த படம் உலக அளவில் வசூலில் சாதனையை குவித்தது. கமலஹாசனின் திரைப்பயணத்தில் எந்த ஒரு படமும் இத்தகைய சாதனையை பெற்றதில்லை. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும், உச்சகட்டத்திற்கு சென்றது இந்த திரைப்படம்.

சரிகா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! நீண்ட நாளுக்கு பின் திரையில் ரீ என்ட்ரி கொடுத்த சரிகா.! 1

விளம்பரம்

கமலின் திரை வாழ்க்கையை போல் இல்லாமல், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் கஷ்டங்கள் நிறைந்தது. அவர் இரண்டு திருமணங்கள் முடித்திருந்தார். ஆனால் இரண்டு மனைவியையும் விவாகரத்து செய்து இருந்தார். பின்னர் கௌதமியுடன் சில காலம் லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்தார். பின்னர் அவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சரிதா. இவருக்கும் கமலுக்கும் 1988 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். தந்தை மற்றும் தாயைப் போலவே மகள்கள் இருவரும் திரைத் துறையில் இருக்கின்றனர். சரிகா கமலஹாசனும் கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்து ஆன போதிலும் மகள்கள் இருவருமே அம்மாவிடமும்,்அப்பாவிடமும் பாசமும் மரியாதையும் கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடையவை  அப்பா இறந்த பிறகு என் படிப்பை விட்டுட்டு தம்பி தங்கச்சி படிப்புக்காக கொத்தனார் வேலைக்கு போனேன்

சரிகா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! நீண்ட நாளுக்கு பின் திரையில் ரீ என்ட்ரி கொடுத்த சரிகா.! 3

விளம்பரம்

சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த சரிகா கொரோனா காலங்களில் பணத்திற்கே மிக கஷ்டப்பட்டதாக பேட்டிகளில் கூறியிருந்தார். மகள்கள் கணவர் என அனைவரும் பிரபலங்களாக இருக்கும்போது சரிகாவின் இந்த பேட்டி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில காலம் திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் ராஜஸ்ரீ தயாரிப்பில் சூரஜ் பர்ஜாட்யா இயக்கத்தில் உருவாகியுள்ள உஞ்சாய் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், அனுப்பம் கேர் போன்றவர்கள் நடித்துள்ளனர். இவரின் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பாலிவுட்டில் மீண்டும் சரிகாவின் ரீ என்ட்ரி அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment