மௌன ராகம் சீரியலில் சக்தியாக நடித்து வரும் ரவீணாவிற்கு பிறந்தநாள் பரிசாக அவரது தாயார் மோரிஸ் காரேஜ் என்ற விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் ரவீணா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2014ம் ஆண்டு வெளியான ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 2016ம் ஆண்டு வெளியான்கதை சொல்ல போறோம் என்ற படத்தில் நடித்தார். பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியலும் பங்கெடுத்தார். பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார். பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் சில காலம் நடித்தார்.

அவருக்கு திருப்புமுனையாக அமைந்த நாடகம் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் தான். இந்த சீரியலில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யூட்யூபில் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் சோசியல் மீடியாக்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர், அப்போது நடனமாடியும், ரிலீஸ் வீடியோக்கள் செய்தும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.ரவீணாவிற்கு பிறந்தநாள் பரிசாக அவரது தாயார் மோரிஸ் காரேஜ் என்ற விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கி இருக்கிறார். 25 லட்சம் மதிப்புள்ள அந்த காரை ரவீனாவின் அம்மா பிறந்த நாள் பரிசாக அவருக்கு கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரவீனா அம்மாவிற்கு நன்றிகளை கூறியுள்ளார். அதில் 10.10.2022, ஆச்சரியங்கள், சிரிப்பு, காதல், சிலிர்ப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாள், என் அம்மா தனது பரிசு MG HECTOR PLUS மூலம் என்னை ஆச்சரியப்படுத்தினார். எனக்காக நீங்கள் செய்யும் அனைத்தையும் நான் பாராட்டுகிறேன், உன்னை என் அம்மா என்று அழைப்பதில் நான் எப்போதும் பெருமைப்படுவேன். அம்மா நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்திருக்கும். என் வாழ்வில் இருப்பதற்கும், ஒவ்வொரு நாளையும் கணக்கிடுவதற்கும் நன்றி. என் அம்மாவாக இருக்க, நான் விரும்பிய சிறந்த நபர் நீங்கள்தான். ங்கள் ஒவ்வொருவரும் என்னைப் பற்றி சிந்திக்க உங்கள் நாளில் சிறிது நேரம் ஒதுக்குவதை நான் எவ்வளவு பாராட்டுகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிய விரும்புகிறேன். நான் உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார். Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Raveena Daha