ஹரிஷ் கல்யாணின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! வருங்கால மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய ஹரிஷ்

நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். சிந்து சமவெளி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அதற்குப்பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார். வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அவர், கடைசி வரை போராடினார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. பின்னால் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வந்த அவர், சமீபத்தில் தமக்கு நிச்சயம் முடிந்து விட்டதாகவும், நல்ல தொடக்கம் என்றும் மனைவியின் கைகளை பிடித்து இருக்கும் படியான போட்டோவை பகிர்ந்து இருந்தார்.

ஹரிஷ் கல்யாணின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! வருங்கால மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய ஹரிஷ் 1

விளம்பரம்

ஹரிஷ் கல்யாணின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! வருங்கால மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய ஹரிஷ் 3

ஹரிஷ் கல்யாணின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! வருங்கால மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய ஹரிஷ் 5

விளம்பரம்

சில நாட்களுக்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்று ஹரிஷ் கல்யாணத்துக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்றும்,அக்டோபரில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியிட்டது. இதை ஹரிஷ் கல்யாண் மறுக்கவுமில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. திருமணம் குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்த ஹரிஷ் கல்யாண் முதல்முறையாக தற்போது தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அவர் பெயர் நர்மதா உதயகுமார் என்றும் பகிர்ந்து இருக்கிறார்.

தொடர்புடையவை  விஜய்சேதுபதி கைவிட்ட முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம்.! "800" ட்ரைலர் வெளியானது.!

ஹரிஷ் கல்யாணின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! வருங்கால மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய ஹரிஷ் 7

விளம்பரம்

ஹரிஷ் கல்யாணின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! வருங்கால மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய ஹரிஷ் 9

கடவுளின் ஆசியால் எங்கள் இருவரின் இல்லற வாழ்க்கையை தொடங்க இருக்கின்றோம். உங்களது அன்பு என்றென்றைக்கும் எங்களுக்கு இரட்டிப்பாக வேண்டும் என்றும் அவர் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment