உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “கலகத் தலைவன்” படத்தின் டீசர் வெளியானது.!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் கலகத் தலைவன். ஆரம்பத்தில் படங்களை தயாரித்து வெளியிட்டு வந்த அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலாக தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக, விஜய், திரிஷா நடித்த குருவி படத்தை தயாரித்தார். பின்னர் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை வெளியிடும் உரிமையை பெற்றார். முதன் முதலாக 2009ம் ஆண்டு வெளியான ஆதவன் திரைப்படம் மூலமாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 2012ம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "கலகத் தலைவன்" படத்தின் டீசர் வெளியானது.! 1

விளம்பரம்

முதல் படத்திலேயே சந்தானத்துடன் இணைந்து காமெடியாக நடித்ததால் இவருக்கு அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் உதயநிதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக சிந்தனையுள்ள படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தற்போது படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது கைவசம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படபிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

தொடர்புடையவை  "மோதிரமும் இல்ல, கல்யாணமும் இல்ல, போய் வேலைய பாருங்க - சுஷ்மிதா சென்"

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "கலகத் தலைவன்" படத்தின் டீசர் வெளியானது.! 3

விளம்பரம்

 

இந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்துள்ள கலகத் தலைவன் படத்தில் நடித்துள்ளார். இதை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்தற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sony Music South

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment