மாமா பயமா இருக்கு.! வெடி வைக்க சின்ன குழந்தை போல பயந்த மஹாலக்ஷ்மி.!

ரவீந்தரும் மஹாலெட்சுமியும் இணைந்து தல தீபாவளியை வெடி வெடித்து கொண்டாடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ரவீந்தர். இந்த நிறுவனத்தின் மூலம், நட்புன்னா என்னனு தெரியுமா? முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். தற்போது பாலாஜி முருகதாஸை வைத்து ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மாமா பயமா இருக்கு.! வெடி வைக்க சின்ன குழந்தை போல பயந்த மஹாலக்ஷ்மி.! 1

விளம்பரம்

கடந்த மாதம் திருப்பதியில் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். 2007ம் ஆண்டு ஒளிபரப்பான அரசி என்ற சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் மகாலெட்சுமி. முன்பாக இவர் சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வந்தார். தற்போது சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற டிவி சீரியல்களில் பணியாற்றி வந்தார். ரவீந்தரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கும் ரவீந்தருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்தனர். சத்தமில்லாமல் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் பற்றி திரையுலகினர் யாருக்கும் தெரியாது.

தொடர்புடையவை  மீண்டும் ஒன்றாக இணைந்த பாய்ஸ்..! வெளியாகியது கோலிசோடா ரைசிங் படத்தின் டீசர்..!

மாமா பயமா இருக்கு.! வெடி வைக்க சின்ன குழந்தை போல பயந்த மஹாலக்ஷ்மி.! 3

விளம்பரம்

குடும்பத்தினர் முன்னிலையில் மட்டுமே இவர்கள் திருமணம் நடந்தது. பின்னர் தொடர்ந்தி பேட்டிகளை கொடுத்து வந்த அவர்கள், அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். நேற்று இருவரும் தங்களது தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment