
ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை மேம்படுத்தும் நோக்கிலும், மாணவர்கள் தங்கள் படத்தை புரிந்து கொள்ளும் நோக்கிலும் 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இனி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்கி வரும் மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் நடப்பு கல்வியாண்டு (2019 -20) முதல் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், மேற்கண்ட பள்ளிகளில் இந்த ஆண்டு முதலே இந்த தேர்வு அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம் எனவும், பொதுத் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளஇதுதொடர்பான கருத்துரு, ஏற்கனவே கடந்த கல்வியாண்டில், தொடக்க கல்வி இயக்குநரிடமிருந்து பெறப்பட்டது எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே, பல ஆண்டுகளாக பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த வகுப்புகளுடன் சேர்ந்து பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கும் தற்போது பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணலர்களுக்கும் இனி பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது மாணவர்களின் கல்வியை வளர்க்குமா? இல்லை மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்குமா? என்பது போக போகத்தான் தெரியவரும்.