ஆபத்தான நோயுடன் போராடி கொண்டிருக்கிறேன், சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு.!

தனக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நடிகை சமந்தா உருக்கமான ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். நோயின் பாதிப்பை ஏற்றுக் கொண்டு, அதனை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பதாகவும், விரைந்து குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் சமந்தா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு தனிமையாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் சில படங்களில் கமிட் ஆகி வருகிறார். குறிப்பாக வாடகை தாய் பற்றிய கஷ்டங்களை விளக்கும் படமாக யசோதா படத்தில் அவர் நடித்து வருகிறார்.

ஆபத்தான நோயுடன் போராடி கொண்டிருக்கிறேன், சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு.! 1

விளம்பரம்

இந்தப் படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய நிலையில், சமந்தா பற்றிய ஒரு தகவல் பரவிக்கொண்டே இருந்தது. அவருக்கு தோல் நோய் என்றும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றெல்லாம் தகவலை பரப்பி வந்தனர். ஆனால் சமந்தா தற்போது instagram பக்கத்தில் அவருக்கு என்ன நோய் என்பதை விளக்கி ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். மருத்துவமனையில் கைகளில் டிரிப்ஸ் ஏறும்போதும் யசோதா படத்திற்காக அவர் டப்பிங் பேசி வருகிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், யசோதா பட டிரைலருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு தமக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு மையோசெட்டீஸ் எனப்படும் ஆட்டோ இம்யூட் பிரச்சனை அதாவது தானாகவே எதிர்ப்பு சக்தி குறையும் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  சூர்யா இந்தியன் இல்லையா? வெளுத்து வாங்கும் பிஜேபி பிரமுகர் காயத்ரி ரகுராம்

ஆபத்தான நோயுடன் போராடி கொண்டிருக்கிறேன், சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு.! 3

விளம்பரம்

இந்த நோயுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன், விரைவில் குணமடைவேன் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் இருக்கிறது கெட்ட நாட்களும் இருக்கிறது. இந்த நோய் முழுமையாக குணமடைந்த பிறகு இதைப்பற்றி பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே உங்களிடம் பகிரும் நிலைமை வந்துவிட்டது, லவ் யூ ஆல், இதுவும் கடந்து போகும் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு நோய் இருப்பதை முன்கூட்டியே கண்டுபிடிக்காவிட்டால், அது உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. விரைந்து சமந்தா குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

ஆபத்தான நோயுடன் போராடி கொண்டிருக்கிறேன், சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு.! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment