வேஷ்டி சட்டையுடன் செம்ம கெத்தாக ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் பார்க்க சென்ற புகழ்.!

விஜய் டிவியின் மூலம் பிரபலமான புகழ் தற்போது ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் நிகழ்ச்சி பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் பார்வையாளர்கள் இடத்தில் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு நடனமாடி காமெடி செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் இருந்து வேலை வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர் புகழ். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சென்னைக்கு வந்த இவருக்கு சரியான வேலைகள் கிடைக்கவில்லை. இதனால் ஆரம்பத்தில் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். பின்னர் வடிவேல் பாலாஜி மூலமாக இவருக்கு விஜய் டிவியில் காமெடி ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் பெண்கள் கெட்டப்பில் மட்டுமே நடித்து வந்தார் புகழ்.

வேஷ்டி சட்டையுடன் செம்ம கெத்தாக ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் பார்க்க சென்ற புகழ்.! 1

விளம்பரம்

பின்னர் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலமாக அவருக்கு பல லட்சம் பின் தொடர்பவர்கள் கிடைத்திருக்கிறார்கள். மேலும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தல அஜித் உடன் இணைந்து வலிமை படத்திலும், சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார் புகழ். சமீபத்தில் அவர் தனது காதலியை திருமணம் முடித்து இருந்தால் அந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் அது இருந்தது.

தொடர்புடையவை  ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்த குக் வித் கோமாளி பிரபலங்கள்.! இந்த வாரம் செம்ம Fun இருக்கு.!

வேஷ்டி சட்டையுடன் செம்ம கெத்தாக ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் பார்க்க சென்ற புகழ்.! 3

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக ஜூ கீப்பர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் புகழ். படிப்படியாக வளர்ந்து இன்று பெரிய அளவில் இருக்கிறார். மேலும் youtube சேனல் ஒன்று தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார் புகழ். அங்கு வேட்டி சட்டையில் ஸ்டேடியத்தில் நின்று கொண்டு ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு ரீல்ஸ் செய்திருக்கிறார் புகழ். அந்த வீடியோவை தனது instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment