கணவர் சஞ்சீவுக்காக முதல் முறையாக ஆலியா உணவு சமைத்து கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை தங்களது youtube பக்கத்தில் அவர்கள் பகிர்ந்து உள்ளனர். சின்னத்திரையில் மக்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலமாக பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் அந்த தொடரில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ்வையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது, ராஜா ராணி பாகம் இரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். குழந்தை பிறக்கும் தருவாயில் அந்த தொடரை விட்டு விலகி இருந்தார். குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அவர் எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் சன் டிவியில் ஒரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர் சீரியலில் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் அவரது கணவர் சஞ்சீவ் சன் டிவியில் ஒரு சீரியலில் ஏற்கனவே நடித்துக் கொண்டிருப்பதால், கணவருடன் மற்றொரு சீரியலில் அவர் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் குழந்தை பிறந்ததால் உடல் எடை ஏறி காணப்பட்டதால், அவர் நடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடல் எடையை குறைத்து விட்டு சீரியலில் நடிப்பேன் என்று சபதம் எடுத்து இருந்தார். கடுமையாக பயிற்சி செய்து இரண்டு மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்து விட்டார் ஆலியா. தற்போது அவர் மீண்டும் நாடகங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். வெகு நாட்களுக்கு பிறகு சன் டிவி தொடரில் அவர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கணவர் சஞ்சீவுக்கு முதல் முறையாக அவர் சமைத்து கொடுத்து இருக்கிறார். பிரட் ஆம்ப்லேட் செய்து அசத்தியிருக்கிறார் ஆலியா. அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Sanjiev&Alya