விஜய் டிவி பிரபலத்துடன் நடித்துள்ள தனலட்சுமி.! அப்போ பிக்பாஸ்ல சொன்னது எல்லாம் பொய்யா?

பொதுமக்களில் இருந்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு சென்றுள்ள தனலட்சுமி பற்றி நாளுக்கு நாள் ஏதாவது புதிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. பொதுமக்களில் இருவரை எடுத்து இந்த முறை பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு அனுப்ப பிக்பாஸ் குழு திட்டமிட்டு இருந்தது. அதன்படி டிக் டாக் செய்து வந்த தனலட்சுமியும், திருநங்கை ஷிவினையும் உள்ளே அனுப்பி இருந்தது பிக்பாஸ் டீம். இதில் தனலட்சுமி மற்ற போட்டியாளர்களிடம் மிக கடுமையாக நடந்து கொள்கிறார். எது சொன்னாலும் சண்டை போடும் விதமாக பேசுவதால் அவரிடம் பேசவே பலர் பயப்படுவதாக கமலஹாசன் முன்பே ஹவுஸ்மேட்ஸ் தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து சர்ச்சை போட்டியாளராக இருந்து வரும் தனலட்சுமி குறித்து நாளுக்கு நாள் ஏதாவது புதிய செய்திகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. வீடியோ கீழே உள்ளது.

விஜய் டிவி பிரபலத்துடன் நடித்துள்ள தனலட்சுமி.! அப்போ பிக்பாஸ்ல சொன்னது எல்லாம் பொய்யா? 1

விளம்பரம்

சமீபத்தில் பேட்டி அளித்திருந்த தனலட்சுமியின் நண்பர்கள், தனலட்சுமி சொந்த பணத்தில் இரண்டு படங்களை தயாரித்து இருப்பதாகவும், மேலும் அவரது தாயார் துணிக்கடை நடத்தி MLM மோசடி, அதாவது ஆட்களை சேர்த்து விட்டால் பணம் கிடைக்கும் என்ற ரீதியில் 89 லட்சம் வரை ஏமாற்றி இருப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தனர். இதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்திருந்தார். தங்களுக்கு 80 லட்சம் கடன் தான் இருக்கிறது நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தனலட்சுமி நடித்திருந்த ஷார்ட் பிலிம் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக இருந்தது. இது்நாள் வரை தனலட்சுமி பொதுமக்களில் ஒருவராக இருந்து எடுக்கப்பட்டவர் என்று நினைத்திருந்த நிலையில், இந்த மீண்டும் அவர் ஒரு வெப் சீரீஸில் நடித்திருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடையவை  ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.! புகைப்படங்கள் இதோ

விஜய் டிவி பிரபலத்துடன் நடித்துள்ள தனலட்சுமி.! அப்போ பிக்பாஸ்ல சொன்னது எல்லாம் பொய்யா? 3

விளம்பரம்

விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயுடன் இணைந்து அவர் வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கிறார். வத்திக்குச்சு என்ற அந்த தொடரில் அவர் மாமியாரை கொடுமைப்படுத்தும் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இதையெல்லாம் மறைத்து தான் ஒரு பொது மக்களில் இருந்து வந்தவர் என்று தனலட்சுமி இத்தனை நாள் பொய் சொல்லி வந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். தனலட்சுமியும் நாஞ்சில் விஜயனும் நடித்திருந்த அந்த வெப் தொடரின் ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Modern Monkey

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment