என்னயா அப்பா நீ? பொறுப்பில்லாம பேசிட்டு இருக்க? கோபியை வெளுத்து வாங்கிய இனியா டீச்சர்.!

இனியாவின் ஆசிரியர் கோபியை திட்டி தீர்க்கும் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கோபியின் கடைசி மகள் இனியா பள்ளியில் அமர்ந்து கொண்டு மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது ஆசிரியர்கள் கவனித்து விட்டனர். இதனால் வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்து வந்தால்தான் மீண்டும் வகுப்பறைக்கு அனுமதிப்பேன் என்று கூறி விடுகின்றனர். இதனால் இனியா வீட்டிற்கு வந்து ஒவ்வொருவரிடம் தன்னுடன் பள்ளிக்கு வருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். முதலில் தனது தாத்தாவை அழைக்கிறார். ஆனால் பள்ளியில் எது சொன்னாலும் அதை வீட்டில் வந்து சொல்லக்கூடாது என்று இனியா கண்டிஷன் போடுகிறார். இதற்கு தாத்தா மறுப்பு தெரிவிக்கிறார். பின்னர் பாக்யாவிடம் சென்று இந்த விஷயத்தை இனியா கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

என்னயா அப்பா நீ? பொறுப்பில்லாம பேசிட்டு இருக்க? கோபியை வெளுத்து வாங்கிய இனியா டீச்சர்.! 1

விளம்பரம்

வெளிநாடுகளில் பள்ளிகளில் போனை எடுத்துச் செல்கிறார்கள் என்று பாக்கியாவிடம் மறைமுகமாக இனியா சொல்ல, அது வெளிநாடு நம்ம ஊரில் அது போல் பள்ளிக்கு போனை எடுத்துச் செல்லக்கூடாது என்று பாக்யா சொல்கிறார். இதனால் பாக்கியாவிடம் உண்மையை சொல்ல இனியா தயங்குகிறார். பின்னர் கோபிக்கு கால் செய்யும் இனியா அவரை தன்னுடன் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். இந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து, இனியாவை கண்டிக்கின்றனர். மேலும் இனியாவை அடிக்கச் செல்கின்றனர். தாத்தாவையும் பாக்யாவையும் எதிர்த்து பேசும் இனியாவை ஈஸ்வரி பாட்டி அடிக்க செல்கிறார். இதனால் இனியா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற முடிவு எடுக்கிறார்.

தொடர்புடையவை  புது கோமாளிகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கும் சீசன் 5.! 'குக் வித் கோமாளி' ப்ரோமோ இதோ.!

என்னயா அப்பா நீ? பொறுப்பில்லாம பேசிட்டு இருக்க? கோபியை வெளுத்து வாங்கிய இனியா டீச்சர்.! 3

விளம்பரம்

இதனால் தனது அப்பா கோபிக்கு கால் செய்து வருமாறு கேட்கிறார். அவரும் இனியாவின் பள்ளிக்கு செல்கிறார். அங்கு தலைமை ஆசிரியரிடம் இனியாவுக்கு வக்காலத்து வாங்கி பேசி கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான ஆசிரியர் கோபியை வெளுத்து வாங்குகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment