யுவன் ஒரு பிராடு வேஸ்ட்.! யுவனை திட்டி பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவுகள்.! வைரலாகும் பழைய போஸ்ட்

இளம் வயதில் இயக்குனராக வந்து தற்போது முன்னணி நடிகராக மாறி இருக்கும் ஒருவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்கிற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்த படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு படங்களில் நடிக்கும் ஆசை வந்த காரணத்தினால் தானே ஒரு படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். லவ் டுடே என்கிற அந்த படம் 2K கிட்ஸ்களின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

யுவன் ஒரு பிராடு வேஸ்ட்.! யுவனை திட்டி பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவுகள்.! வைரலாகும் பழைய போஸ்ட் 1

விளம்பரம்

இந்தப் படம் வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட விமர்சகர்கள் கூட இந்த படத்தை திரைக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த படம் வெளியாகி 7 நாட்களில் சுமார் 50 கோடி அளவிற்கு வசூலை பெற்று சாதனை படைத்து வருகிறது. காதலர்கள் இருவர் தங்கள் காதலை வீட்டில் தெரியப்படுத்தும் போது ஹீரோயின் அப்பா ஒரு கண்டிஷன் ஒன்றை போடுகிறார். அதில் இருவரும் தங்களது மொபைல் போனை ஒரு நாளைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது ஒருவரைப் பற்றிய ரகசியங்கள் மற்றொருவருக்கு தெரிய வரும். அப்படியும் அந்த காதல் தொடர்ந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டிஷன் போடுகிறார். அதன்படியே இருவரும் தங்களது மொபைல் ஃபோன்களை மாற்றிக்கொண்டனர். இதனால் சண்டை ஏற்படுகிறது.

தொடர்புடையவை  பத்திரிக்கை வெச்சாச்சு!!!மறக்காம எல்லாரும் கல்யாணத்திற்கு வந்துருங்க!!!இணையத்தில் வெளியான நயன் விக்கியின் திருமண பத்திரிகை!!!

யுவன் ஒரு பிராடு வேஸ்ட்.! யுவனை திட்டி பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவுகள்.! வைரலாகும் பழைய போஸ்ட் 3 யுவன் ஒரு பிராடு வேஸ்ட்.! யுவனை திட்டி பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவுகள்.! வைரலாகும் பழைய போஸ்ட் 5 யுவன் ஒரு பிராடு வேஸ்ட்.! யுவனை திட்டி பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவுகள்.! வைரலாகும் பழைய போஸ்ட் 7 யுவன் ஒரு பிராடு வேஸ்ட்.! யுவனை திட்டி பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவுகள்.! வைரலாகும் பழைய போஸ்ட் 9 யுவன் ஒரு பிராடு வேஸ்ட்.! யுவனை திட்டி பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவுகள்.! வைரலாகும் பழைய போஸ்ட் 11 யுவன் ஒரு பிராடு வேஸ்ட்.! யுவனை திட்டி பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவுகள்.! வைரலாகும் பழைய போஸ்ட் 13

விளம்பரம்

பின்னர் அவர்களது காதல் தொடர்ந்ததா? திருமணம் வரை போனதா? இருவரும் மீண்டும் இணைந்தார்களா? என்பது குறித்து கதை தான் லவ் டுடே. இந்த படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதன் படு குஷியில் இருக்கிறார். இந்த நிலையில் அவரின் பழைய முகநூல் பதிவுகளை தோண்டி எடுத்து சில நெட்டிசன்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதில் அவர் யுவன் சங்கர் ராஜாவை வேஸ்ட், பிராடு என்றெல்லாம் பதிவிட்டு இருக்கிறார். மேலும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி கலாய்த்து கமெண்ட் செய்து பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையத்தில் நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். ஒருவர் வளர்ந்தால் பிடிக்காது அதனால்தான் சில விஷமிகள் இவ்வாறு செய்வதாக பிரதீப் ரங்கநாதனின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment