இயக்குனர் மிஷ்கின் கமலின் பிறந்தநாள் நைட் பார்ட்டியில் பாட்டு பாடிக் கொண்டிருந்தபோது கமலஹாசன் ராதிகா தோளில் கையை போட்டுக்கொண்டு ஸ்டைலாக நின்று மிஷ்கின் பாடிய பாட்டை ரசித்துக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைராலகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமலஹாசன். இவர் இவரது ரசிகர்களால் செல்லமாக “ஆண்டவர்” என்று அழைக்கப்படுகிறார். திரை உலகில் இவருக்கு உலகநாயகன் என்ற பெயரும் உண்டு. சமீபத்தில் கமல் தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். அதற்காக அவர் தினமும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது பிறந்த நாளை கொண்டாடி வந்தார். விஜய் டிவியில் அவருக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிறந்தநாள் அன்று தனது குடும்பத்துடன் நாளை செலவிட்டார். தனது அண்ணன் சாருஹாசன் மற்றும் அண்ணி கோமளம் அண்ணன் மகள்கள் அனுஹாசன், சுஹாசினி மற்றும் மணிரத்னம் ஆகியோரோடும் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அவரது பிறந்த நாள் பரிசாக மணிரத்தினத்துடன் இணைந்து தனது 234 ஆவது படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார் கமல். அதற்கான அறிவிப்பை மணிரத்னமே வெளியிட்டு இருந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னத்துடன் கமல் இணைந்து இருப்பதால் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் பரிசாக அறிவித்திருந்தனர். மேலும் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு இரவு நேர பாட்டி ஒன்றும் நடைபெற்றது. இதில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.
#KamalHaasan #Mysskin#Dronacharya #Ekalavya#HappyChildrensDay ❤️ pic.twitter.com/LdYNSUiHc5
— ashvath aruggan (@ashvatt) November 14, 2022
இந்த பிறந்தநாள் பார்ட்டியில் தனது மகள் அக்ஷராவுடன் நடனம் ஆடினார் கமலஹாசன். மேலும் தனது தோழி ராதிகாவுடன் பத்தல பத்தல பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டார். நடிகர் சித்தார்த், பார்த்திபன், இயக்குனர் மிஷ்கின், லிங்குசாமி போன்ற பலர் கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இதில் மிஷ்கின் ஒரு பாட்டு பாடிக்கொண்டிருந்தார். அதை ராதிகாவின் தோளில் கையில் போட்டுக் கொண்டு கமல் ஸ்டைலாக நின்று ரசித்து கொண்டிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video.!
Youtube Video Code Embed Credits: C4Cinema