பிக்பாஸில் தற்போது அரண்மனை டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ரட்சிதா மகாலட்சுமி “சிறிது நீர்” வேண்டும் என்பதற்கு பதிலாக “சிறுநீர்” வேண்டுமென்று பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸில் வார வாரம் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும். இதில் சிறப்பாக விளையாடிய இரண்டு பேரை தேர்வு செய்து அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வு செய்வர். அதனால் இந்த போட்டியில் அனைவரும் மிக தீவிரமாக விளையாடி வருகின்றனர். போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளாத நபர்களை ஜெயிலுக்கு அனுப்புவதும் வழக்கமாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வாரம் அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அரண்மனையில் 500 ஆண்டுகால பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பும் காவலர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. காவலை மீறி எப்படி திருடு நடக்கிறது என்பதை கண்டுபிடித்து அரசவையில் விசாரணை நடத்த வேண்டும், திருடியவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் இதுவே இந்த வாரத்திற்கான டாஸ்காக இருக்கிறது. ஆரம்பித்த முதல் நாள் முதலே சண்டையே நடந்து வருகிறது. இதில் ராணியாக இருக்கும் ரட்சிதாவின் உணவில் ஷிவின் உப்பை கலந்ததால் சண்டை ஆரம்பித்தது. இதனால் ரட்சிதா சாப்பிடாமலேயே இருந்து விட்டார். அவருக்கு இரத்த அழுத்தம் குறைந்து விட்டதால் அவர் தனது படுக்கையின் மீது சோகமாக அமர்ந்திருந்தார்.


போது அங்கு வந்த ராம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க எனக்கு சிறுநீர் வேண்டும் என்று ரட்சிதா கேட்கிறார். பின்னர் ராம் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். அவர் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கவில்லை. பின்னர் ராபர்ட் மாஸ்டர் அருகில் நின்று கொண்டிருந்தபோது, எனக்கு சிறுநீர் வேண்டுமென்று மீண்டும் ரட்சிதா கேட்கிறார். இதனால் அதிர்ச்சியான மாஸ்டர் “என்னது” என்று கேட்கிறார். அவர் மீண்டும் சிறுநீர் என்று சொல்ல இதோ கொண்டு வருகிறேன் என்று சொல்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் மரணமாக ட்ரோல் செய்து வருகின்றனர். தமிழ் தெரியாமல் ஏன் இப்படி தமிழை கொலை செய்கிறீர்கள் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிறுநீர் ஆ… சிறு நீர் ஆ.. 😛 pic.twitter.com/CP7Vrbqeoy
— News Reader Ranjith (@NewsRanjith) November 16, 2022
#Rachitha : “Manna enaku சிறுநீர் vendum”! Unga tamil arumai👏🏻😂😂 #BiggBossTamil6 #BiggBossTamil #BigBoss6tamil #biggboss @ikamalhaasan pic.twitter.com/oOoTWPpemm
— Deepak Srinivasan (@deepak_seenu) November 16, 2022