சூப்பர் ஸ்டார் நடிக்கும் “ஜெயிலர்” படத்தின் மேக்கிங் வீடியோ.! அதிகாரபூர்வமாக வெளியிட்ட படக்குழு

சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அதில் வயதான தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தமிழ் திரைஉலகின் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடந்த 47 ஆண்டுகளாக படங்களில் நடித்து வருகிறார். பாலச்சந்தர் அறிமுகத்தில் இவர் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் இன்று சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார். திறமைக்கு அழகும் நிறமும் தேவையில்லை உழைப்பு இருந்தால் போதும் என்று நிரூபித்துக் காட்டியவர். இதுவரை 168 திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் நடிக்கும் "ஜெயிலர்" படத்தின் மேக்கிங் வீடியோ.! அதிகாரபூர்வமாக வெளியிட்ட படக்குழு 1

விளம்பரம்

இவர் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்தே படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. எனவே தற்போது அடுத்த கதையை மிக கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனது 169 படமாக ஜெயிலர் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. 50 சதவீதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

தொடர்புடையவை  கடனில் ஜப்தி செய்யப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் சொத்துக்கள்..! கண்டும் காணாமல் இருக்கும் விஜய்..அப்பாவுக்கு உதவி செய்வாரா

சூப்பர் ஸ்டார் நடிக்கும் "ஜெயிலர்" படத்தின் மேக்கிங் வீடியோ.! அதிகாரபூர்வமாக வெளியிட்ட படக்குழு 3

விளம்பரம்

இந்தப் படம் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக இருப்பதாகவும், சில காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் துவங்கி இருப்பதாலும், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த படத்திற்குஅனிருத் இசையமைக்கிறார். ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் கதாநாயகியாக இணைந்து இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மேக்கிங் வீடியோவை தற்போது அவர்களே வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

விளம்பரம்

Twitter Original Source From: Sun Pictures.

விளம்பரம்

Leave a Comment