நடிகர் அப்பாஸா இது? உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன அப்பாஸ்.!

தமிழின் ஒரு காலத்தில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்த நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முகம் எல்லாம் வீங்கி ஆள் அடையாளமே தெரியாமல் அவர் மாறி இருக்கும் புகைப்படம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த நடிகர் அப்பாஸ், 1996 ஆம் ஆண்டு வெளியான “காதல் தேசம்” என்கிற படத்தில் மூலமாக தமிழில் அறிமுகமானார். மும்பையில் வளர்ந்த இவர் மாடலிங் துறையில் கால் பதித்தார். பின்னர் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்திருக்கிறார் அப்பாஸ். குறிப்பாக இவர் நடித்த ஆனந்தம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது.

நடிகர் அப்பாஸா இது? உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன அப்பாஸ்.! 1

விளம்பரம்

பின்னர் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தர்மயுத்தம் என்னும் சீரியலிலும், ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைதேகி எனும் சீரியலிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு ராமானுஜன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களின் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார் அப்பாஸ். ஏழு ஆண்டுகளாக திரைத் துறையில் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இவருக்கு வாய்ப்புகள் இல்லாத போது ஹார்பிக் விளம்பரங்களில் நடித்தார். அது மிகப்பெரிய சர்ச்சையானது. ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்த இவர் இப்படி ஒரு விளம்பரத்தில் நடிப்பது போல் ஆகிவிட்டது என்று பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

தொடர்புடையவை  ஜிவி பிரகாஷ், கெளதம் வாசுதேவ் கூட்டணியில் திரில்லர் படம்.! 13 படத்தின் டீசர் வெளியானது.!

நடிகர் அப்பாஸா இது? உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன அப்பாஸ்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நடிகர் அப்பாஸ் சமீபத்தில் ஊன்றுகோலை வைத்து நடப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அவரது கால் முட்டுப் பகுதியில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதனால் அவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் தனது instagram பக்கத்தில் தற்போது பகிர்ந்து இருக்கிறார். தான் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விரைந்து குணமாக வேண்டும் என்று பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment