கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா. இவர் தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ள தகவல் கிடைத்துள்ளது. தற்போது “சரிகம தமிழ்” நிறுவனம் தயாரிப்பில் அவர் சன் டிவியில் ஒரு புது தொடரில் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 1ல் செம்பாவாக நடித்து புகழ்பெற்றவர் ஆலியா மானசா. இந்த தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அந்த தொடரின் கதாநாயகனான சஞ்சீவுயுடன் காதல் ஏற்பட்டது. ஆலியாவின் வீட்டில் இவர்களின் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே பெற்றோரின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை கரம் பிடித்தார் ஆலியா. இவர்களுக்கு ஐலா என்ற குழந்தையும் ஹர்ஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2வில் சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலக நேர்ந்தது. பின்னர் உடல் எடை கூடியதால் அவரால் எந்த நாடகத்திலும் நடிக்க முடியவில்லை. அவருக்கு வாய்ப்புகள் கிடைத்த போதும் உடல் எடை காரணமாக சூட்டிங் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கடுமையாக உடற்பயிற்சி செய்து இரண்டே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருக்கிறார் ஆலியா. இதனால் அவர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சன் டிவியில் ஒரு தொடரில் அவர் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். விரைவில் அந்த நாடகத்தின் ப்ரோமோவை சன் டிவி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆலியாவின் கணவர் சஞ்சீவ், கயல் சீரியலில் சைத்ரா ரெட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆலியாவும் சன் டிவியில் என்ட்ரி கொடுக்க இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தொடரில் டீலா நோ டீலா என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்த ரிஷி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலியாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Sanjiv & Alya