புதுப் பொலிவுடன் மீண்டும் திரையில் வர இருக்கும் “பாபா” திரைப்படம்.! வேலைகள் தொடங்கியது.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் தற்போது மீண்டும் புதுப் பொலிவுடன் வெளியாக உள்ளது. 2002ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாபா. இந்த திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, தயாரிப்பு என மூன்றையும் ரஜினிகாந்தே செய்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஏற்கனவே ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்களை இயக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் நான்காவதாக பாபாவை இயக்கி இருந்தார். இதில் கதாநாயகியாக மனிஷா கொய்ராலா, டெல்லி கணேஷ், கவுண்டமணி, சுஜாதா, நம்பியார் சாயாஜி ஷிண்டே போன்ற பல முன்னணி கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர்.

புதுப் பொலிவுடன் மீண்டும் திரையில் வர இருக்கும் "பாபா" திரைப்படம்.! வேலைகள் தொடங்கியது.! 1

விளம்பரம்

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். நடனத்திற்காக பிருந்தா, பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றியிருந்தனர். பல முன்னணி நடிகர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களை வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. பாபாவை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படம் வெளியான நேரத்தில் பாபா பற்றி பலர் அறிந்து அறிந்து கொண்டனர். தற்போது வரை பாபா முத்திரை ஒரு அடையாளமாகவே இருந்து வருகிறது. இந்த படம் வெளியானபோது குழந்தைகள் புகைப்படம் எடுக்கும் போது பாபா முத்திரையை காட்டுவது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் இந்த படம் மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாக தயாராக இருக்கிறது.

தொடர்புடையவை  BiggBoss-ல் இருந்து வந்த பின்னர் ஜனனி நடத்திய முதல் போட்டோஷூட்.! குவியும் லைக்குகள்.!

புதுப் பொலிவுடன் மீண்டும் திரையில் வர இருக்கும் "பாபா" திரைப்படம்.! வேலைகள் தொடங்கியது.! 3

விளம்பரம்

இதற்காக எடிட்டிங் வேலைகள் கலர் கிரேடிங் வேலைகள் என்று செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டு விரைவில் திரையில் வெளியாக இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தில் வந்த மாயா மாயா, சக்தி கொடு போன்ற பாடல்கள் என்றும் மக்கள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கின்றன. எனவே இந்த பாடல்களை அனைத்தும் புதிதாக டால்பி தொழில்நுட்பத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு புது அனுபவத்தை கொடுக்க இருக்கின்றது. இந்த அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment