ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்!

ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்! 1

குயின் வெப் சீரிஸில் மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குநர் விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அந்த விதத்தில் சமீபத்தில் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரனாவத் நடித்திருந்த நிலையில் அவரது தோற்றம் சரியாக பொருந்தவில்லை என்றும் விமர்சனம் எழுந்தது.

விளம்பரம்

பிரியதர்ஷினி இயக்கத்திலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தி அயர்ன் லேடி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நித்யாமேனன் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.இந்த நிலையில் இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த வெப் சீரிஸாக இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளாராம் . மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

தொடர்புடையவை  சூர்யாவின் 48வது பிறந்தநாள்.! கங்குவா படத்தில் இருந்து வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ இதோ.!

எம்.எக்ஸ் பிளேயர் தயாரித்து உள்ள இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது . 26 நொடிகள் நீளம் கொண்ட அந்த டீசரில் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த ஆரம்பம் முதலே முகத்தைக் காட்டாமல் டீசரை வெளியிட்டது படக்குழு.தற்போது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் ஜெயலலிதாவின் இளம் வயது புகைப்படத்தைப் போலவே இருப்பதால் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment