இந்த படம் கோமாவுக்கு போய்டுச்சு.! ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை.!

நடிகர் சந்தானம் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்த படம் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படத்தை இயக்குனர் மனோஜ் பீதா இயக்கியிருந்தார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து புகழ், முனிஸ்,காந்த் ரெட்டிங் கிங்க்ஸ்லி ஆகிய பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பலரும் எதிர்பார்த்து இருந்த இந்த படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலரும் இந்த படம் நன்றாக இல்லை என்ற கருத்தையே முன் வைத்திருந்தனர். தற்போது ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் இந்த படத்தை விமர்சித்து தனது கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கோமாவுக்கு போய்டுச்சு.! ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை.! 1

விளம்பரம்

தெலுங்கில் வெளியாக மிகப்பெரிய வெற்றியடைந்த படமான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்கிற படத்தை தமிழில் ரீமேக் செய்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் வரும் சஸ்பென்சும் த்ரில்லரும் தான். ஆனால் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் எதுவுமே இல்லை மொக்கையாக இந்த படத்தை எடுத்து வைத்திருப்பதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்தார். அந்த படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் எந்த ஒரு சஸ்பென்சும் இல்லாமல் மொக்கையாக இந்த படம் சென்று கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார்.

தொடர்புடையவை  கால் பந்து போட்டியை காண சென்ற ஷாலினியை தேடி வந்து பார்த்த பாலிவுட் பிரபலம்.! வீடியோ இதோ.!

இந்த படம் கோமாவுக்கு போய்டுச்சு.! ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை.! 3
மேலும் காமெடியும் இல்லாமல் கலகலப்பும் இல்லாமல் இந்த படத்தை எடுக்கச் சொல்லி சந்தானம் சொல்லிவிட்டார் போல, அதனால் ரொம்ப சீரியஸ் ஆகி ஐசுயூவில் இருந்து எந்திரிக்கவே முடியாமல் படம் கோமாவிற்கே போய்விட்டது. இவர்கள் இந்த படத்தை அப்படியே தமிழில் டப்பிங் செய்தால் இந்த படம் ஓட வாய்ப்பு இருக்கிறது. மத்தபடி இது ஒன்றுக்கும் ஆகாத மொக்கை படம் என்று கடுமையாக விமர்சித்தார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Talkies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment