ரஞ்சிதமே பாடலுக்கு வெறியாட்டம் போட்ட தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்.! வேற லெவல் குத்து.!

சமீபத்தில் வெளியாகி மக்கள் மனங்களை கொள்ளையடித்துள்ள ரஞ்சிதமே பாடலுக்கு சன் டிவியின் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி தற்போது மரண குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஸ்ருதி. இவர் இதற்கு முன்பாக அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நாடகத்தில் துளசி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. கேரளாவைச் சேர்ந்த இவர் 1995ஆம் ஆண்டு அக்ராஜன் என்கிற மலையாள படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

ரஞ்சிதமே பாடலுக்கு வெறியாட்டம் போட்ட தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்.! வேற லெவல் குத்து.! 1

விளம்பரம்

பின்னர் இவர் இளைய தளபதி விஜய் நடிப்பில் மாண்புமிகு மாணவன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த இவருக்கு வெள்ளித்திரை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. எனவே இவர் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தார். தென்றல் நாடகத்தில் தான் முதன்முதலில் நடித்தார். இந்த நாடகம் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. சாந்தமான கதாபாத்திரத்தில் இவர் நடித்ததால் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த ஒருவராக இவர் மாறிப் போனார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு என்ற சீரியல் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  முடிவுக்கு வந்த சுந்தரி சீரியல்..! வெளியான கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்...!

ரஞ்சிதமே பாடலுக்கு வெறியாட்டம் போட்ட தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்.! வேற லெவல் குத்து.! 3

விளம்பரம்

தற்போது இவர் சமீபத்தில் வெளியாகி 60 மில்லியன்க்கு மேல் பார்வையாளர்களை பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டிருக்கிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment