பாபா ரீ ரிலீஸ்க்காக தீவிரமாக டப்பிங் பேசி வரும் தலைவர்.! மனுஷன் என்னா ஸ்டைலா இருக்காரு.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பாபா. இந்த படம் தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார். அடுத்த மாதம் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இதற்காக மீண்டும் டப்பிங் பேசும் பணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. 2002 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் தான் பாபா. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, தயாரிப்பு என மூன்றையும் ரஜினிகாந்தே செய்திருந்தார். படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

பாபா ரீ ரிலீஸ்க்காக தீவிரமாக டப்பிங் பேசி வரும் தலைவர்.! மனுஷன் என்னா ஸ்டைலா இருக்காரு.! 1

விளம்பரம்

அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக பாபா திரைப்படத்தை இயக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. இந்தப் படத்தில் மனிஷா கொய்ராலா, டெல்லி கணேஷ், கவுண்டமணி, சுஜாதா, நம்பியார், சாயாஜி ஷிண்டே போன்ற பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாபாவை மையமாகக் கொண்டும், மந்திரங்களை மிகவும் அழகாக எடுக்கப்பட்டது இந்த படம். இந்த படம் வெளியான பின்பு பாபா குறித்தும், பாபா முத்திரை குறித்தும் பலர் அறிந்து கொண்டனர். அந்த காலத்து சிறுவர்கள் புகைப்படங்கள் எடுக்கும் போது பாபா முத்திரையை காட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

தொடர்புடையவை  நாக சைதன்யா சோபிதா திருமண சடங்குகள் ஆரம்பம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

பாபா ரீ ரிலீஸ்க்காக தீவிரமாக டப்பிங் பேசி வரும் தலைவர்.! மனுஷன் என்னா ஸ்டைலா இருக்காரு.! 3

விளம்பரம்

இந்த நிலையில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. கலர் கிரேடிங் வேலைகள், டிஜிட்டல் மேம்பாடு என்று ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டு அடுத்த மாதம் 12ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்காக ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. சில வசனங்களை மாற்றியும், சில வசனங்களை மேம்படுத்தியும் புதிய முறையில் இந்த படம் வெளியாக இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தான் நடித்த படங்களிலேயே தன் மனதுக்கு மிக நெருக்கமான படமாக இருப்பது பாபா தான் என்று சில நாட்களுக்கு முன்பு ரஜினி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாபா ரீ ரிலீஸ்க்காக தீவிரமாக டப்பிங் பேசி வரும் தலைவர்.! மனுஷன் என்னா ஸ்டைலா இருக்காரு.! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment