பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தனது முதல் வீடியோவை ராபர்ட் மாஸ்டர் வெளியிட்டு இருக்கிறார். வீட்டிற்கு வந்த அவரை தாய், தந்தை, நண்பர்கள் உட்பட அனைவரும் சேர்ந்து வரவேற்று இருக்கின்றனர். தனது தந்தையை பார்த்தவுடன் ஓடிச் சென்று அவர் கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்தார். அப்போது அவர் கண் கலங்கினார். பிரபல நடன இயக்குனராக இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான அழகன் என்கிற படத்தில் மம்முட்டிக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர் காதல் தேசம் என்கிற படத்தின் மூலமாக கோரியோகிராபராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் குத்து, சிலம்பாட்டம், சுறா, ஒஸ்தி, போடா போடி, வணக்கம் சென்னை, வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற பல படங்களில் இவர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சில காலமாக திரைத்துறையில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அவருக்கு வனிதாவின் மூலமாக பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை வனிதாவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் அவர்களின் நட்பு தொடர்கிறது. இந்த நட்பின் மூலமாக பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறார் ராபர்ட் மாஸ்டர். சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அவர் முதல் இரண்டு வாரங்கள் மட்டுமே நன்றாக விளையாடியதாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து தனது தந்தையின் நினைப்பால் வாடியதால் தன்னால் சரியாக விளையாட முடியவில்லை என்று வெளியேறிய பின்பு கமலிடமே கூறியிருந்தார் ராபர்ட்.

இந்த நிலையில் கடந்த வார நாமினேஷனில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பின்பு அவர் நேராக காரில் வீட்டிற்கு வந்தார். அவரை அவரது தாய் மற்றும் தந்தை நண்பர்கள் ஆகியோர் வரவேற்றனர். நேராக சென்று தனது தந்தையை கட்டி பிடித்து கண் கலங்கினார் ராபர்ட் மாஸ்டர். பின்னர் ஒரு வீடியோவை வெளியிட்ட அவர் டார்லிங் நான் இப்போது வெளியே வந்து விட்டேன் தனக்கு எப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறது, தனக்கு ஓட்டுப் போட்ட அனைவருக்கும் நன்றி, என்று பேசி அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7