ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவ் தற்போது ஏர்போர்ட்டில் சண்டை போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. குளிர் 100 டிகிரி என்கிற படத்தில் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகர் சஞ்சீவ் கார்த்திக். அதன் பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற சீரியலின் மூலமாக பிரபலமானார் சஞ்சீவ். பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்கிற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்கிற தொடரில் எழிலரசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில படங்களில் நடித்திருக்கும் அவருக்கு சின்னத்திரை தான் மிகப்பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இவர் ராஜா ராணி தொடரில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த ஆலியாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஐலா, அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதிகள் ஏதாவது ஒரு வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கின்றனர். மேலும் youtube பக்கம் ஒன்றையும் அவர்கள் நடத்தி வருகின்றனர். அடிக்கடி வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கின்றனர். குறிப்பாக சஞ்சீவின் மூத்த மகள் ஐலா பார்ப்பதற்கே பொம்மை போல் இருப்பார். அவர் செய்யும் குறும்புகளை வீடியோவாக பதிவேற்றி வருகின்றனர் ஆலியா சஞ்சீவ் தம்பதிகள். இந்த நிலையில் இன்று சஞ்சீவின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அதில் விமான நிலையத்தில் சஞ்சீவ் சண்டை போடும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆலியாவும் சஞ்சீவும் வெளியூர் செல்ல பிரபல நிறுவனத்திடம் விமானத்தில் டிக்கெட் வாங்கி இருக்கின்றனர். விமான நிலையம் வந்து அடைந்ததும் ஒன்பது மணி நேரமாக விமானம் வராத காரணத்தினால் பயணிகள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். பின்னர் அந்த நிறுவனம் இவர்களை சமாளித்து பேசியுள்ளது. மேலும் விமானத்திற்காக காத்திருந்து காத்திருந்து பெண் ஒருவர் மயங்கி விழுந்திருக்கிறார். இதனால் கடுப்பான சஞ்சீவ் அனைவருடன் சேர்ந்து விமான நிறுவன ஊழியருடன் சண்டையிட்டு இருக்கிறார். மேலும் ஏர் ஏசியா நிறுவனத்தில் இனிமேல் பயணம் செல்லாதீர்கள். அவர்கள் தங்களது கடமையை உணராமல் பொறுப்பற்ற முறையில் இருக்கிறார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.