நம்மள சிரிக்க வச்ச வடிவேலு பொழப்பு சிரிப்பா சிரிச்சு போச்சு.! நாய் சேகர் படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம்.

திரையில் நேற்று வெளியாகிய நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் பற்றிய ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை கூறியிருக்கிறார். 5 வருடங்களுக்குப் பிறகு வடிவேலு திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார். அவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடித்த படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். மருதமலை தலைநகரம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் வடிவேலுக்கு காமெடிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அதை நம்பி இந்த படத்திற்கு பலரும் சென்றனர். ஆனால் பலரையும் இந்த படம் ஏமாற்றி இருப்பதாகவே தெரிகிறது. இது குறித்து ப்ளூ சட்டை தற்போது தனது காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். வடிவேலுக்காக படம் பார்க்க சென்ற பலரும் இந்த படம் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், வடிவேலுவின் காமெடிகள் கொஞ்சம் கூட எடுபடவில்லை என்ற கருத்தையே முன் வைத்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நம்மள சிரிக்க வச்ச வடிவேலு பொழப்பு சிரிப்பா சிரிச்சு போச்சு.! நாய் சேகர் படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம். 1

விளம்பரம்

வடிவேலு நாய்களை கடத்தி அதன் மூலமாக பணம் பறிக்கும் கும்பலுக்கு தலைவனாக இருக்கிறார். ஃப்ளாஷ் பேக்கில் அவரது பெற்றோர்களுக்கு குழந்தை இல்லாமல் இருக்கும் பொழுது ஒரு சித்தர் நாய்க்குட்டி ஒன்றை கொடுக்கிறார். அதன் பின்னர் அவருக்கு பணம் புகழ் அனைத்தும் கிடைக்கிறது. வடிவேலுவும் அதன் பின்னர் தான் பிறக்கிறார். பணக்காரராக வாழ்ந்தவர் ஏழ்மை நிலைமைக்கு வந்த காரணம் அவரின் அந்த ராசியான நாய்க்குட்டியை வீட்டில் வேலை செய்த ஒருவர் திருடி சென்று விட்டார். பின்னர் அந்த நாயை தேடி வடிவேலு செல்கிறார். அப்போது அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த நாய்க்குட்டியை அவர் மீட்டரா? இல்லையா? என்பது குறித்த படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படம் பற்றி தற்போது பேசிய ப்ளூ சட்டை மாறன் ஏன்டா இந்த படத்திற்கு வந்தோம் என்று ஆகிவிட்டதாக கூறினார்.

தொடர்புடையவை  மகனின் முகத்தை முதல்முறையாக காண்பித்த நடிகை Amalapaul...! வைரலாகும் புகைப்படங்கள்..!

நம்மள சிரிக்க வச்ச வடிவேலு பொழப்பு சிரிப்பா சிரிச்சு போச்சு.! நாய் சேகர் படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம். 3

விளம்பரம்

மேலும் இந்தப் படத்தில் வரும் ஒவ்வொருவருக்கும் கேரக்டர் சரியாக வடிவமைக்கப்படவில்லை. காமெடிகள் சிரிப்பே வரவழைக்கவில்லை. முனீஸ்காந்தெல்லாம் எதற்காக வருகிறார் என்றே தெரியவில்லை வடிவேலுவை ரசிக்க முடியவில்லை. அவருடைய தோற்றமும் பழைய வடிவேலு போல் இல்லாமல் வயதாகி விட்டது. ட்ரெய்லரை பார்த்தபோதே அவரது ரசிகர்கள் கமெண்டில் சென்று திட்டி இருந்தனர். அப்போது உஷாராகி இருக்க வேண்டும். ட்ரெய்லரை பார்த்தபோதே நமக்கே தொண்டை கவ்வியது. மேலும் நம் அனைவரையும் சிரிக்க வைத்த வடிவேலுவின் நிலைமை சிரிப்பாக சிரித்து விட்டது என்று அவர் தனது விமர்சனங்களை கூறினார். அவரின் அந்த விமர்சனத்தை நீங்களும் பார்க்க கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tamil Talikes

விளம்பரம்

Leave a Comment