பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் லால் நடிக்க ஒப்பந்தம்!!

பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் லால் நடிக்க ஒப்பந்தம்!! 1

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தென்னிந்தியத் திரையுலகிலமே மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தாய்லாந்தில் தொடங்க இருக்கிறது. பல்வேறு இயக்குநர்கள் ‘பொன்னியின் செல்வன்’ கதையை இயக்குவது என முயற்சி செய்து முடியாமல் போனது.ஆனால் இம்முறை இயக்கியே தீருவது என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மணிரத்னம்.

கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். ஆனால், படக்குழு இன்னும் யாருடைய பெயரையும் அறிவிக்கவில்லை. தற்போது, இந்தக் கூட்டணியில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான லால் இணைந்து இருக்கிறார்.

விளம்பரம்

இந்தப் படத்தின் முன்னணி நடிகர்களோடு இணைந்து வாள் பயிற்சியும், குதிரைப் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ படத்திலேயே லால் நடிக்க வேண்டியது. தேதிகள் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது. தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை மலையாளத் திரையுலகின் முன்னணி இணையதளத்துக்கு அளித்த பேட்டியொன்றில் லால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையவை  "ஆடியோ லாஞ்சுலாம் வேணாம்..ஆனா 365 நாளும் வேற வேற போட்டோ"!!"AK hates publicity"!! நக்கலாக பதிவிட்டுள்ள மாறன்!! அடுத்து பிரச்சனையை கிளப்பிவிட்டு ப்ளூ சட்டை!!

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக வைரமுத்து ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment