பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தனது சூப்பர் மார்க்கெட்டை விட்டுவிட்டு பழைய கடைக்கு திரும்புகின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பங்கான தொடர்புகளை எடுக்கும் விஜய் டிவி கூட்டுக்குடும்பத்தின் அருமையை விளக்கும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை ஒளிபரப்பி வருகிறது் இந்தத் தொடரில் அதிரடி திருப்பங்கள் ஏதாவது ஒன்று நடைபெற்றுக் கொண்டே வருகிறது. முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வாழ்ந்த வீட்டை மீனாவின் அப்பாவிற்கு விற்றார்கள். அங்கிருந்து பிரச்சினை தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கதிரின் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் சூப்பர் மார்க்கெட் கட்டிய இடம் விவசாய நிலத்தை சேர்ந்தது என்கிற காரணத்தினால் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு அதிகாரிகள் வந்து உத்தரவிட, அந்த இடத்தை காலி செய்தனர். இதற்குப் பின்னால் மீனாவின் அப்பா ஜனார்த்தனனின் மிகப்பெரிய சதி இருக்கிறது. இருந்தபோதிலும் அந்த இடத்தை காலி செய்து விட்டு தற்போது தங்களது பழைய கடையான பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை திறந்து பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு, மீண்டும் வியாபாரத்தை துவங்கி இருக்கின்றனர். தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இதுபோல் சோதனை காலமாகவே இருந்து வருகிறது.

ஆனாலும் பல சோதனைகளைக் கடந்து இந்த குடும்பம் மனம் தளராமல் இருந்து வருகிறது. இது பலருக்கும் ஊக்கத்தை கொடுக்கிறது. அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Vijay Television