ஊரே அசீமை காறி துப்புது.! அசீமை கிழித்து தொங்கவிட்ட சமையல் மந்திரம் கிரிஜா.!

பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர் அசீம் பற்றி பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ பேசியிருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருக்கிறார் அசீம். அசீமின் ஆர்மியோ அவர்தான் வெற்றியாளராக வேண்டும் டைட்டில் வின்னராக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். அசீம் வீட்டில் உள்ளே சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமலும் கேலி செய்யும் விதமாகவும் பேசி வருவது தொடர் கதையாக இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாக அவர் தன்னைத்தானே மாற்றிக் கொண்டு போட்டியில் கவனத்துடன் விளையாடி வருகிறார். பலமுறை நாமினேஷன் வந்த போதும் முதல் ஆளாக காப்பாற்றப்பட்டு வீட்டிற்கு உள்ளே இருக்கிறார் அசீம்.

ஊரே அசீமை காறி துப்புது.! அசீமை கிழித்து தொங்கவிட்ட சமையல் மந்திரம் கிரிஜா.! 1
அசீம் ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற பல சீரியல்கள் நடித்திருக்கிறார். மேலும் சன் டிவியில் பூவே உனக்காக சீரியலிலும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் மூலமாக அவர் பல ரசிகைகளை பெற்று இருக்கிறார். டிஆர்பி யிலும் இந்த சீரியல் டாப்பில் இருந்தது. இந்த நிலையில் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது அவருடன் வேலை பார்த்து வந்த சமையல் மந்திரம் கிரிஜா பிரபல ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பிக்பாஸ் தொகுப்பாளராக இருக்கும் கமலஹாசன் பற்றியும் அசீம் பற்றியும் அவர் தன்னுடைய விமர்சனங்களை தெரிவித்தார். தற்போது ஆண் பெண் என்றெல்லாம் பேசி வருகிறார். அந்த வேறுபாடுகள் எல்லாம் எப்போதோ மலை ஏறிவிட்டது. அசீம் மிகவும் பின்தங்கிய ஒரு ஆளாக இருக்கிறார். வரிசைப்படுத்தும் டாஸ்கில் மற்ற போட்டியாளர்களை கேவலமாக பேசிய அசீம் அவர்தான் இந்த வீட்டில் முதன்மையானவன் என்ற நினைப்பு இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  பணப்பெட்டியை எடுத்த அமுதவாணன்? எத்தனை லட்சத்துடன் வெளியேறுனாரு தெரியுமா?

ஊரே அசீமை காறி துப்புது.! அசீமை கிழித்து தொங்கவிட்ட சமையல் மந்திரம் கிரிஜா.! 3
அந்த நினைப்பு இருப்பதில் தவறில்லை. ஆனால் அது ஒரு எல்லையுடன் என்று இருக்க வேண்டும். எல்லை தாண்டி பிறரை அசிங்கப்படுத்துவது கூடாது என்றும் பேசினார். மேலும் நான் அசீமுடன் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். எனக்கு அவரைப் பற்றி தெரியும். அசீமினால் பலரும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு பாதியிலேயே சென்று இருக்கின்றனர். அவருடன் நடித்த கதாநாயகிகள் அதிகமாக அழுது இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹைதராபாத்தில் இருந்து வந்த நடிகை ஒருவரை அசீம் ஹைதராபாத்தில் இருந்து வந்தால் நீ பெரிய நடிகையா என்று மரியாதை குறையாக பேசி எல்லாம் இருக்கிறார். மேலும் ஊரே அசீமை காரி துப்புகிறது. நான் மட்டும் உள்ளே இருந்தால் அவனை பளார் என்று அறைந்து இருப்பேன் என்று சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ பேசியிருக்கிறார்.

ஊரே அசீமை காறி துப்புது.! அசீமை கிழித்து தொங்கவிட்ட சமையல் மந்திரம் கிரிஜா.! 5

விளம்பரம்

மேலும் வெளியில் இருந்த விக்கிரமனை விட தற்போது வீட்டில் இருக்கும் விக்கிரமனை தனக்கு பிடித்திருக்கிறது. அவர் மற்றவர்கள் குறை சொன்னால் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதை மட்டும் மாற்றிக் கொண்டால் விக்ரமன் சிறப்பான போட்டியாளராக இருப்பார். மேலும் தெலுங்கு பிக்பாஸை நாகார்ஜுனா மற்றும் நானி இருவரும் தொகுத்து வழங்கியிருக்கின்றனர். அங்கெல்லாம் தப்பு என்றால் தப்பு என்று நேரடியாக சொல்லி விடுவார்கள். ஆனால் கமல் அதை சொல்வதில்லை அதனால் எனக்கு கமல் மீது மிகப்பெரிய வருத்தம் இருக்கிறது என்று அவர் பேசினார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  23 வயசாகி என் பொண்ணுக்கு ஒரு லவ் லெட்டர் கூட வரல.! வருந்திய தாய்.! சிரிப்பால் அதிர்ந்த அரங்கம்.!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Galatta Tamil

விளம்பரம்

Leave a Comment