எப்படி இருக்கிறது அவதார் இரண்டாம் பாகம் ! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அவதார். உலகளவில் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது சுமார் 160 மொழிகளில் 13 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளிவந்துள்ளது. அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்த முழு விமர்சனத்தை பார்க்கலாம். அதற்கு முன்பாக அவதார் முதல் பாகத்தின் கதையை முதலில் சிறிது பார்த்துவிட்டு பின்னர் அவதார் இரண்டாம் பாகத்தின் கதைக்களத்திற்கு செல்லலாம். பண்டோரா என்னும் கிரகத்தில் நாவி என்கிற இனம் வாழ்ந்து வருகிறது. இந்த இனத்தை கைப்பற்றுவதற்காக கதாநாயகன் ஜேக் சுல்லி அவர்களுடைய இடத்திற்கு செல்கிறார். அவர்களை அந்த இடத்திலிருந்து விரட்டுவதற்கு பதிலாக நாவிகளாக மாறி அவர்களின் வாழ்வியலை கற்றுக் கொள்கிறார். அதே சமயத்தில் கதாநாயகி நெய்டிரி மீதும் காதல் கொள்கிறார்.

எப்படி இருக்கிறது அவதார் இரண்டாம் பாகம் ! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 1
தான் எதற்காக இங்கு வந்தோம் என்பதையே கதாநாயகன் மறந்துவிட்டு பண்டோரா கிரகத்தின் மீது பாசம் காட்டத் தொடங்குகிறார். இதனை தெரிந்து கொள்ளும் இராணுவம் பண்டோரா கிரகத்தின் மீது தாக்குதல் தொடுக்க தொடங்குகிறது. அந்த இடத்தில் பல இடங்கள் சேதமடைந்து சுக்கு நூறாகிறது. பிறகு நாவிகளுடன் இணைந்து, முழு நாவிகளின் தலைவனாக மாறி, தன்னுடைய நாவிப்படைகளுடன் இணைந்து ராணுவத்தை எதிர்கொள்கிறார் கதாநாயகன் ஜேக். இதில் வில்லன் காலனல் குவாரிட்ச் இறந்து விடுகிறார். நாவிகள் போரில் வெற்றி பெற்றதால் மனிதர்கள் பூமிக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் காலனல் குவாரிட்ச் மகன் பண்டோராவிலேயே தங்கி விடுகிறார். அவரை கதாநாயகன் ஜேக் வளர்த்து வருகிறார். அத்துடன் முதல் பாகம் நிறைவடைந்தது. பின்னர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் மனைவியுடன் சந்தோஷமாக நாவி இனத்தின் தலைவனாகவும் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் ஜேக்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஷாரிக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜூலி போட்ட பதிவு.! லவ் பண்றங்களா? ரெண்டு பேரும்

எப்படி இருக்கிறது அவதார் இரண்டாம் பாகம் ! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 3

தற்போது மீண்டும் இங்கிருந்து பிரச்சினை துவங்குகிறது. இதுதான் தி வே ஆஃப் வாட்டரின் கதைக்களம். மீண்டும் மனிதர்களின் காலடித்தடம் பாண்டோராவில் படுகிறது. வில்லன் காலனல் குவாட்ரிச் முதல் பாகத்தில் இறந்து போன அவர் தனது நினைவுகளை சிப் மூலம் ஸ்டோர் செய்து நாவி உடலில் புகுந்து மீண்டும் ஜேக்கை பழி வாங்குவதற்காக வருகிறார். அப்போது அவரின் மகன் காலனல் குவாட்ரிச்சின் கைதியாக மாட்டிக் கொள்கிறார். இதை பார்த்த ஜேக் இன்னும் இங்கு இருந்தால் தன் மனைவியை மகள்கள் அனைவரையும் இழந்து விடுவேன் என்று சொல்லி பண்டோராவிலிருந்து வெளியேறி கடலில் வசிக்கும் நாவிகளிடம் தஞ்சம் அடைந்து கொள்கிறார். பின்னர் வில்லனிடம் ஜேக்கின் குடும்பத்தினர் சிலர் சிக்கிக் கொள்கிறார்கள். வில்லனை எதிர்த்து போராடாமல் ஹீரோ ஜேக் தஞ்சமடைகிறார். பின்னர் அவர் எப்படி தனது குடும்பத்தினரை காப்பாற்றினார்? என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதிக் கதை.

விளம்பரம்

எப்படி இருக்கிறது அவதார் இரண்டாம் பாகம் ! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 5
கற்பனை திறனால் நம்மை ஆச்சரியப்படுத்தும் ஜேம்ஸ் கேமரூன் இந்த முறையும் பல புதுமைகளை கையாண்டு இருக்கிறார். குறிப்பாக கடல் நாவிகளின் கதாபாத்திரமும் கடலுக்கடியில் காட்டப்படும் உலகமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 3d கிராபிக்ஸ் காட்சிகள் மெருகேற்ற பட்டு பிரம்மாண்டத்தின் உச்சத்தை அடைந்திருக்கிறது. படத்தில் நிறைய குறைகள் இருந்தாலும் பெரும் பெரிய குறையாக படத்தின் நீளம் அமைந்திருக்கிறது. முதல் பாகத்தில் எப்படி காடு நம்மை வியப்பில் ஆழ்த்தியதோ, அதே போல இந்த இரண்டாம் பாகத்தில் கடல் நம்மை வியப்பில் ஆழ்த்தி விட்டது. பல இடங்களில் பொறுமையை சோதித்தாலும் விஎப்எக்ஸ் மற்றும் விஷுவல் அனிமேஷன் குழு இதை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறது. பல கலைஞர்களின் உழைப்பில் உருவான இந்த படம் நம்மை உண்மையிலேயே பிரம்மிக்க வைக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு வெகுவாக கை கொடுத்திருக்கிறது.

தொடர்புடையவை  எதோ தப்பு இங்க நடக்குது சார்...ஆனா அது என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டே இருக்கு"!!"ஆர்வத்தை தூண்டும் அருள்நிதியின் டைரி ட்ரைலர்"

எப்படி இருக்கிறது அவதார் இரண்டாம் பாகம் ! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 7
படத்தின் பாசிட்டிவ் விஷயங்கள்
1.இயக்கம் திரைக்கதை
2.நடிகர்களின் நடிப்பு
3.விஷுவல் மற்றும் VFX
4.அனிமேஷன் காட்சிகள்
5.கடலுக்கு அடியில் காட்டப்படும் காட்சிகள் 6. பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள்.

விளம்பரம்

எப்படி இருக்கிறது அவதார் இரண்டாம் பாகம் ! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 9

படத்தில் நெகட்டிவ் விஷயங்கள்
1.படத்தின் நீளம்.
2. பல இடங்களில் குறைவான சுவாரஸ்யம். மற்றபடி உண்மையிலேயே பிரம்மாண்டத்தின் உச்சம்தான் தி வே ஆஃப் வாட்டர். இந்த படத்திற்கு தமிழ்கிளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.5/5

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: 20th Century Studios India

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment