பார்த்திபன் சொல்றது எல்லாமே பொய்.! விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்த சீதா.!

நடிகை சீதா தற்போது தனக்கும் பார்த்திபனுக்கும் ஏன் விவாகரத்து ஆனது என்று முதல் முறையாக பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சீதா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று 100க்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் நடிகை சீதா. 1985 ஆம் ஆண்டு தொடங்கி 1991 ஆம் ஆண்டு வரை நடித்துக் கொண்டிருந்தவர் பின்னர் நடிப்புக்கு நீண்ட இடைவெளி விட்டார். பின்னர் மாறன் திரைப்படத்தின் மூலமாக 2002 ஆம் ஆண்டு மீண்டும் திரைத்துறைக்கு திரும்பினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் சொல்றது எல்லாமே பொய்.! விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்த சீதா.! 1

விளம்பரம்

தொடர்ந்து அவர் தமிழ், மலையாளம் தெலுங்கு என்று பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டு வெளியான ட்ரிகர் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இவர் முன்னணி நடிகையாக இருந்த போது பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபனுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. புதிய பாதை என்கிற படங்களில் இவரும் பார்த்திபனும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது காதலிக்க தொடங்கிய அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. பின்னர் ஒரு ஆண் குழந்தையை இவர்கள் தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். சில காரணமாக 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையை இருவரும் முறித்துக் கொண்டனர். 2001 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

தொடர்புடையவை  ஷங்கர் மகள்ன்னு யாரும் தூக்கி கொடுக்கல..மோசமாக விமர்சித்தவர்களை விட்டு விளாசிய அதிதி | Aditi Shankar

பார்த்திபன் சொல்றது எல்லாமே பொய்.! விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்த சீதா.! 3
பின்னர் பத்து ஆண்டுகள் கழித்து 2011 ஆம் ஆண்டு இவர் சின்னத்திரை நடிகர் சதீஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்
பின்னர் இந்த திருமணமும் நிலைக்காமல் போய்விட்டது. தற்போது பார்த்திபன் தனது மனைவி சீதாவை பற்றி சில விஷயங்களை கூறியிருந்தார். தன்னுடைய மனைவி மிக அதிகமாக எதிர்பார்ப்பதாக பார்த்திபன் பேசி இருந்தார். அதை மேற்கோள் காட்டி நிரூபர் கேள்வி எழுப்ப நான் சிறிய குடும்பத்தில் இருந்து வந்தவள், நடிகை சுகாசினி ஒரு படத்தில் பாடுவதைப் போல என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என்று நினைத்து இருந்தேன். தன்னுடன் வாழும் கணவரிடமிருந்தும் அதை எதிர்பார்ப்பு இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று சீதா கேள்வி எழுப்பினார். மேலும்
மேலும் பார்த்திபன் ஒரு பேட்டியில் சீதா என்னிடம் காதலை சொல்லும் பொழுது நான் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தேன் என்று பார்த்திபன் பேசினார். ஆனால் இதை மறுத்து தற்போது சீதா விளக்கம் அளித்து இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "ஒரு ஆள் 200 பேரை அடிக்கிறாங்க.?" 'லியோ' படம் குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை கடும் விமர்சனம்

பார்த்திபன் சொல்றது எல்லாமே பொய்.! விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்த சீதா.! 5

நடித்துக் கொண்டிருந்தபோது தொடர்ந்து போன் செய்து அந்த மூன்று வார்த்தையை கூறுமாறு பார்த்திபன் தன்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். எனக்கும் அவர் மீது இருந்த காதலின் காரணமாக நானும் ஒருநாள் ஐ லவ் யூ சொன்னேன். ஆனால் என்னுடைய அப்பா நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கீழ் வீட்டில் இருந்த மற்றொரு போன் வழியாக கேட்டு இது பெரிய பிரச்சனையே ஆகிவிட்டது. அப்படித்தான் இந்த காதல் ஆரம்பித்தது, இதை தவிர பார்த்திபன் சொல்வதைப் போல இல்லை. அவர் பொய்யான சில விஷயங்களை தொடர்ந்து பேட்டிகளில் கூறி வருகிறார், நானும் அதை தொடர்ந்து கவனித்து வருகிறேன் என்று நடிகை சீதா பேசினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Wow Tamizhaa

விளம்பரம்

Leave a Comment