நடிகர் விஷால் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் லத்தி படம் குறித்து தற்போது பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் 2004ம் ஆண்டு வெளியான செல்லமே என்கிற மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்பு அவன் இவன், சண்டக்கோழி, திமிரு, துப்பறிவாளன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் படங்களை தயாரித்தும் வருகிறார். தற்போது இவர் லத்தி, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் பாகம் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் லத்தி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தற்போது மக்கள் இந்த படம் குறித்த விமர்சனங்களையே முன் வைத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லத்தி படத்தை ராணா புரோடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் ஏ வினோத்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக நீண்ட நாட்களுக்குப் பிறகு சுனைனா தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரியிலேயே தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு டிசம்பரில் தான் படம் வெளிவந்துள்ளது. ஜனவரியில் கையில் காயம் ஏற்பட்டதால் சில நாட்களாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சிகிச்சை முடித்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய அவர் சூட்டிங் ஸ்பாட்டிலேயே காலில் ஏற்பட்ட காயத்தினால் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் இரண்டாவது முறையாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

படத்திற்கு பொதுமக்கள் தங்களது விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். படம் நன்றாக இருப்பதாகவும், சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருப்பதாகவும், ஒரே ஆள் ஆயிரம் பேரை அடிப்பதெல்லாம் லாஜிக் ஓட்டைகளாக இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. நீங்களும் அவர்கள் சொன்ன முழு விமர்சனங்களை பார்க்க கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Chennai Waalaa