சில மாதங்கள் முன்பு விமானநிலையத்தில் தாக்கப்பட்ட நடிகர் விஜய் சேதுபதியின் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அவருடைய ரசிகர்கள் பலரும் தாக்கிய நபர் யார் என தேடி வந்துகொண்டிருந்தனர். இப்பொது இந்த பிரச்சனை அடங்கிய நிலையில், தற்போது விஜய் சேதுபதியை தாக்கிய நபர் தனியார் பேட்டியில் நடந்த உண்மை சம்பவத்தை குறித்து பேசியுள்ளார்.

மகா காந்தி என்னும் அந்த நபர் கூறியது, “விஜய் சேதுபதி அவர்கள் தற்போது தான் தேசிய விருது வாங்கி இருந்தார் அதற்க்கு வாழ்த்துகள் சொல்ல தான் நான் அங்கு போனேன், அது மட்டும் இல்லாமல் குறு பூஜையில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேக்கலாம் என்று தான் போனேன் அதுக்கு விஜய் சேதுபதி யார் அந்த குறு எனக்கு தெரியாது என்று கூறினார்.

இதனால் தான் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது, அது தான் அந்த இடத்தில் நடந்தது நான் தேவையில்லாமல் அந்த இடத்தில் யாரையும் அடிக்கவில்லை, ஆனால் என்னை பற்றி தவறாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார் மகாகாந்தி.
இது குறித்து நமது நடிகர் விஜய் சேதுபதி கூறியது, இந்த நபர் யார் என்றுய் கூட எனக்கு தெரியாது. ஆனால் அந்த இடத்தில் என்கிட்ட அவரு பேசிய விதம் சரியில்ல, மத்தபடி எந்த ஒரு சாதியினரையோ அல்லது பசும்பொன் ஐயாவை பற்றியோ நான் எதுமே தவறாக பேசவில்லை,அவரு என்னுடைய பெயரை கெடுப்பதற்காக பல அவதூறு விசயங்களை செய்து வருகிறார்.
ஆனால் இது இப்படியே போனால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபோறேன், அந்த நபருக்கு எதிராக வழக்கு தொடருவேன் என்று நமது நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
Video Courtesy – Bose media.