கோவை சரளா, CWC அஸ்வின் நடித்துள்ள செம்பி படம் எப்படி இருக்கு? பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ

கோவை சரளா, குக் வித் கோமாளி அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் செம்பி படம் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர். மைனா, கும்கி, தொடரி போன்ற வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் சில வருடங்களாக எந்த படத்தையும் எடுக்காமல் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கோவை சரளா மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினை வைத்து செம்பி என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை சரளா, CWC அஸ்வின் நடித்துள்ள செம்பி படம் எப்படி இருக்கு? பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ 1

விளம்பரம்

இந்தப் படத்தை டிரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து இருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கோவை சரளா மாறுபட்ட கதாபாத்திரத்தில் 90 வயது முதியவராக நடித்திருக்கிறார். பிரபு சாலமன் படங்களை பொறுத்தவரை எப்பொழுதும் இயற்கை அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதனால் இந்த படமும் அதேபோல் எடுக்கப்பட்டிருக்கும் என்பது ட்ரெய்லர் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

தொடர்புடையவை  "அந்த ரெண்டு படத்திற்கும் இரண்டாம் பாகம் ரெடியா இருக்கு" சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட RJ பாலாஜி.!

கோவை சரளா, CWC அஸ்வின் நடித்துள்ள செம்பி படம் எப்படி இருக்கு? பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ 3

விளம்பரம்

தற்போது படம் பற்றி பொது மக்கள் தனது விமர்சனங்களை கூறி வருகின்றனர். பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர். படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், சோசியல் மெசேஜ் சொல்லி இருப்பதாகவும், இந்த வயதிலும் கோவை சரளா மரத்தில் ஏறும் காட்சிகள் பிரமிக்க வைப்பதாகவும் கூறினர். மேலும் அஸ்வின் மீது இருந்த களங்கம் இந்த படத்தினால் துடைக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்தனர். ,மக்கள் பேசிய அந்த வீடியோவை நீங்களும் காண! கீழே கொடுக்கப்பட்டள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video..! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: TN360

விளம்பரம்

Leave a Comment