லவ் டுடே பட டயலாக் சொல்லி மகனை பங்கமாக கலாய்த்து தள்ளிய ராதிகா சரத்குமார்.!

ராதிகா தனது மகன் ராகுலை லவ் டுடே படத்தில் வரும் டயலாக் சொல்லி கலாய்த்து இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். தமிழில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் ஒருவரும், நமக்கு பிடித்தமான ஜோடிகள் தான் ராதிகா – சரத்குமார். நடிகர் ராதிகா நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ராதிகா இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கும் சரத்குமாருக்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். ராதிகாவிற்கு ஏற்கனவே மலையாள நடிகரான பிரதாப் போத்தனுடனும், ஆங்கிலேயர் ஒருவருடனும் திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

லவ் டுடே பட டயலாக் சொல்லி மகனை பங்கமாக கலாய்த்து தள்ளிய ராதிகா சரத்குமார்.! 1

விளம்பரம்

ராதிகா சரத்குமார் நடிகை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கலக்கி வருகிறார். மேலும் தனது ராடான் மீடியா மூலமாக பல நாடகங்கள் மற்றும் படங்களையும் இயக்கி தயாரித்தும் வருகிறார். தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். ராதிகா சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது ஜீன்ஸ் தான். இந்த படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடிக்கும் வாய்ப்பை இவர் பெற்றிருக்கிறார். பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்த போது, வீட்டிற்குள்ளேயே. முடங்கிவிடாமல் சன் தொலைக்காட்சிகளில் சித்தி என்ற நாடகத்தில் நடித்தார்.

தொடர்புடையவை  சொன்னதை செய்யாமல் இழுத்தடித்த படக்குழு.! கேப்டன் மில்லர் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய நடிகர்?

லவ் டுடே பட டயலாக் சொல்லி மகனை பங்கமாக கலாய்த்து தள்ளிய ராதிகா சரத்குமார்.! 3

விளம்பரம்

அதைத் தொடர்ந்து அவர் அண்ணாமலை, செல்வி, வாணி ராணி, சித்தி பாகம் 2 போன்ற நாடகங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் ராதிகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். காரில் தனது மகன் ராகுலுடன் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவர் போன் நோண்டிக்கொண்டு வருகிறார். அதை வீடியோவாக எடுத்த ராதிகா லவ் டுடே படத்தில் வரும் டயலாகை சொல்லி மகனை கலாய்த்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment