ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேபி தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு புலிகள் இருக்கும் கூண்டுக்குள் குதித்த அவர் புலியின் வாலை பிடிக்க பயந்து நடுங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 7-C என்கிற நாடகத்தின் மூலமாக சின்னத்திற்குள் அடி எடுத்து வைத்தவர் கேப்ரியல்லா. பின்னர் இவர் 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். ஒரு நடன நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றிருக்கிறார். அதன் பின்னர் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே இவர் சின்னத்திரை பக்கம் தலை காட்டத் தொடங்கினார். விஜய் டிவியின் மிக முக்கியமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸில் கலந்து கொண்ட கேப்ரியல்லா மிக சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் அவரை பொதுமக்கள் பாதியிலேயே வெளியேற்றினர். அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் நடிகர் சித்தார்த்திற்க்கு ஜோடியாக காவியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரை பொறுத்தவரை ஆரம்பத்தில் காவியா சித்தார்த்தை கட்டாயம் காரணமாக திருமணம் செய்து கொள்வார். ஆனால் தற்போது சித்தார்த் மீது அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக காதல் வந்துள்ளது. சித்தார்த்தை அவர் ஏற்க தொடங்கி இருக்கிறார். இதனால் நாடகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடி அந்த வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் அவர் இன்று ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள கேப்ரியல்லா ஒரு Zoo-விற்கு சென்றுள்ளார். இது அனைவரும் பொதுவாக செல்லும் இடம்தான். அந்த Zoo-வில் புலிகள் இருக்கும் கூண்டிற்குள் குதித்து அந்த புலிகள் வாலை பிடித்து தடவிக் கொடுப்பது போன்ற போட்டோக்களை பிரபலங்கள் எடுப்பது வழக்கம். அதே போல கேபியும் அந்தப் புலிகள் கூண்டுக்குள் குதித்து புலிகள் வாலை தொட பயந்து நடுங்கி இருக்கிறார். பின்னர் பயந்து பயந்து போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் கூண்டுக்குள் குதிக்கும் போது வராத பயம் புலியின் வாலை பிடிக்கும் பொழுது வந்துவிட்டது என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த காணொளியை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O