மதம் பிடித்த ஒற்றை காட்டு யானையிடம் வசமாக மாட்டிய ஜி.வி பிரகாஷ்.! “கள்வன்” டீசர் வெளியானது.!

தமிழின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். குறிப்பாக பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், தெய்வத்திருமகள், மதராசபட்டினம், சூரரைப் போற்று, அசுரன் போன்ற படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தான் கள்வன். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மதம் பிடித்த ஒற்றை காட்டு யானையிடம் வசமாக மாட்டிய ஜி.வி பிரகாஷ்.! "கள்வன்" டீசர் வெளியானது.! 1

விளம்பரம்

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து இவானா, பாரதிராஜா, தீனா, ஞானசம்பந்தம் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். G. டில்லி பாபு இந்த படத்தை தயாரித்திருக்கிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிவி சங்கர் என்பவர் இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்து இருக்கிறார். டீசரை பார்க்கும் பொழுது கும்கி படத்தைப் போல காட்டு யானையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தொடர்புடையவை  மாமா பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! குடும்பத்துடன் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய இந்திரஜா ரோபோ சங்கர்..!

மதம் பிடித்த ஒற்றை காட்டு யானையிடம் வசமாக மாட்டிய ஜி.வி பிரகாஷ்.! "கள்வன்" டீசர் வெளியானது.! 3

விளம்பரம்

நீங்களும் அந்த டீசரை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment