உலகம் எங்கும் உள்ள என் ரசிகர்களுக்கு நன்றி.! வெளியேறிய பின்னர் முதல் வீடியோவை வெளியிட்ட கதிர்.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் விஜே கதிரவன் தற்போது முதல் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அதில் அவர் தனக்கு இத்தனை நாள் வாக்களித்து காப்பாற்றிய மக்கள் அனைவருக்கும் நன்றி என்றும், கூடிய விரைவில் அனைவருக்கும் நல்ல செய்தியை சொல்கிறேன் என்றும் பதிவிட்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸில் 100 நாட்களுக்கும் மேலாக விளையாடி வந்தவர் விஜே கதிரவன். இவர் ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் விஜேவாக பணியாற்றி வந்தார்.பல வருடங்களாக வெற்றிகரமாக ஆங்கராக வலம் வருபவர்களில் ஒருவராக இருக்கிறார். இவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் ரசிகைகள் இவருக்கு அதிகமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் கதிரவனுக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அவரும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 100 நாட்கள் சிறப்பாக விளையாடி நேற்று வெளியேறியிருக்கிறார்.

உலகம் எங்கும் உள்ள என் ரசிகர்களுக்கு நன்றி.! வெளியேறிய பின்னர் முதல் வீடியோவை வெளியிட்ட கதிர்.! 1
பிக்பாஸ் தொடங்கியது முதலே கதிரவன் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டு கொண்டே இருந்தது. அவர் எந்த பிரச்சனைகளுக்கும் உள்ளே வந்து கேட்பதில்லை, மிக சேஃப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். மேலும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் போன்ற பல விமர்சனங்கள் அவர் மீது எழுந்து கொண்டே இருந்தது. இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் கமல் மற்றும் மற்ற போட்டியாளர்கள் சொன்ன நிலையிலும் அவர் இதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. எப்போதும் போல மிக சேஃப்பாக விளையாடி வந்தார். ஒரு கட்டத்தில் மிக்சர் கதிரவன் என்கிற பெயரும் அவருக்கு எழுந்தது. அதை பலரும் ஹேஷ்டேக்காக பயன்படுத்தி கதிரவனை கலாய்த்தும் வந்தனர். இதை தெரிந்து கொண்ட பின்பும் கதிரவன் அமைதியாகவே விளையாடி வந்தார். சுவாரஸ்யமின்மை குறைவாக இருக்கும் காரணத்தினால் அவரை வெளியேற்றும் படி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.! புகைப்படங்கள் இதோ

உலகம் எங்கும் உள்ள என் ரசிகர்களுக்கு நன்றி.! வெளியேறிய பின்னர் முதல் வீடியோவை வெளியிட்ட கதிர்.! 3
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெட்டி டாஸ்க் நேற்று வைக்கப்பட்டது. அதில் மூன்று லட்ச ரூபாயுடன் டாஸ்க் தொடங்கியது் தொடங்கிய உடனேயே கதிரவன் சென்று அந்த பெட்டியை எடுத்து மூன்று லட்சத்துடன் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரின் இந்த செயலும் நெட்டிசன்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டது. இது எப்பேர்ப்பட்ட டாஸ்க்? முந்தைய சீசன்களில் இதை எப்படி எல்லாம் விளையாடி இருக்கிறார்கள்? ஆனால் இந்த கதிரவன் இந்த டாஸ்கையும் மொக்கையாக்கிவிட்டார் என்று சில கண்டன குரல்களும் எழுந்தது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளியேறிய கதிரவன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு இத்தனை நாள் ஆதரவளித்து தன்னை காப்பாற்றி வந்த ரசிகர்களுக்கு அவர் நன்றி சொல்லி இருக்கிறார். மேலும் விரைவில் நல்ல செய்தி ஒன்றை சொல்ல இருப்பதாகவும் அவர் தனது வீடியோவில் கூறி இருக்கிறார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  "வீட்ல உரிய மரியாதை இல்லனா வெளியில தான சார் தேட முடியும்"!!

YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment