பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ஷிவினை ஓடிச் சென்று கட்டிப் பிடித்து தற்போது புதிய வீடியோ ஒன்றை ரட்சிதா மகாலட்சுமி வெளியிட்டு இருக்கிறார்ர பிக்பாஸில் இருந்த போதும் சரி, பிக் பாஸ் விட்டு வெளியே வந்த போதும் சரி, ரட்சிதா மற்றும் ஷிவின் நட்பு பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட இரண்டு முக்கியமான போட்டியாளர்கள் தான் ரட்சிதா மகாலட்சுமி மற்றும் ஷிவின். இவர்கள் இருவருமே ஆரம்பம் முதலே மிக நண்பர்களாக பழகி வந்தனர். பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்ற அன்றைய தினம் தொடங்கி இவர்களின் நட்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. முதல் இரண்டு வாரங்களாக இருவரும் பேசிக்கொள்ள கூட முடியாத சூழ்நிலையில் பொம்மை டாஸ்க்கிற்கு பிறகு இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நட்பு மலர ஆரம்பித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்ல நண்பர்களாக மாறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரீஸ் டாஸ்கில் ரட்சிதாவின் பெற்றோர்கள் உள்ளே வந்த போது கூட ரட்சிதாவின் தாயார் ரட்சிதாவும் நீயும் பார்ப்பதற்கு அக்கா தங்கைகள் போல் இருப்பதாக கூறி விட்டுச் சென்றார். இதன் பிறகு இவர்கள் இருவரின் நட்பு இன்னும் அதிகமானது. பல இடங்களில் ரட்சிதாவை ஷிவின் புகழ்ந்து பேசி இருக்கிறார். தனக்கு ஒரு அக்கா போல ரட்சிதா இருப்பதாக கமல் முன்பே பலமுறை கூறியிருக்கிறார். திடீரென எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு ஷிவின் மிகவும் உடைந்து போனார். மீண்டும் ரட்சிதா உள்ளே வந்த பொழுது அவர்களுடைய நட்பு தொடர்ந்தது. இவர்களின் இருவரின் நட்பு பார்ப்பதற்கே மிக அழகாக இருப்பதாக இணையத்திலும் பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மீண்டும் உள்ளே வந்த பின்னர் ரட்சிதா ஒரு டி-ஷர்ட் ஒன்றை எடுத்து வந்திருந்தார். அதில் எந்தன் நண்பியே நண்பியே என்ற பாடல் வரிகள் உடன் ஷிவின் மற்றும் ரட்சிதாவின் புகைப்படங்கள் அதில் வரையப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் சீசன் 6 இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷிவினுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. பலரும் ஷிவின் அல்லது விக்ரமன் ஆகிய இருவரில் ஒருவர் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்து நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஷிவினுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. வெளியே வந்த ஷிவினை தற்போது ரட்சிதா வரவேற்று அவருடன் இருக்கும் புகைப்படங்களுடன் கூடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார், எனக்கு பிக் பாஸ் வீட்டில் கிடைத்த மிகப்பெரிய பரிசு ஷிவின்தான், இதற்குப் பிறகு உனக்கு கிடைப்பது எல்லாம் அன்பு மட்டுமே, அந்த அனைத்து அன்பையும் பெற தயாராகிக் கொள் பாப்பா என்று ரட்சிதா மற்றும் ஷிவின் இருவரின் பெயரையும் சேர்த்து “ரச்சுவின்” என்கிற ஹேஷ்டேக்குடன் அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O