நிறைமாத நிலவே வா வா..! மனைவி வளைகாப்பில் Cute ஆக பாடிய அஜய் கிருஷ்ணா.! இதோ வீடியோ.!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணாவிற்கு தற்போது குழந்தை பிறக்க இருக்கிறது. அவர் தனது மனைவி ஜெசிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். எளிய பின்னணியில் இருந்து வந்து இன்று பலரும் அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார் சூப்பர் சிங்கரை சேர்ந்த அஜய் கிருஷ்ணா. குரலில் பேசி மிமிக்ரி செய்ய முடியும், ஆனால் ஒரு பிரபலத்தின் குரலில் பாடி மிமிக்ரி செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகராக இருக்கும் உதித் நாராயணன் போல அப்படியே பாடி காட்டி பலரது உள்ளங்களை கொள்ளை கொண்டார். குறிப்பாக மறைந்த பிரபல பாடகர் எஸ் பி பி அவர்களிடமே உதித் நாராயணன் போல பாடி காட்டி அவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார் ஹரே கிருஷ்ணா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறைமாத நிலவே வா வா..! மனைவி வளைகாப்பில் Cute ஆக பாடிய அஜய் கிருஷ்ணா.! இதோ வீடியோ.! 1
அஜய் கிருஷ்ணாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்திருந்தது. ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவிலில் வைத்தும் பின்னர் சர்ச்சில் வைத்தும் நடைபெற்றது. அந்த புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அஜய். இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை சோசியல் மீடியா பக்கத்தின் மூலமாக அறிவித்திருந்தார். கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடிய பின்பு தனது மனைவி ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் அஜய். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தனது மனைவி ஜெசிக்கு வளைகாப்பு நடத்தி அந்த புகைப்படங்களையும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மாமா வாங்க ஒரு டான்ஸ் போடலாம்.! மச்சினிச்சி கூட சேர்ந்து குத்தாட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்

நிறைமாத நிலவே வா வா..! மனைவி வளைகாப்பில் Cute ஆக பாடிய அஜய் கிருஷ்ணா.! இதோ வீடியோ.! 3
அந்த நிகழ்ச்சியில் தனது மனைவிக்காக ஒரு பாட்டு ஒன்றையும் பாடி சர்ப்ரைஸ் செய்திருக்கிறார் அஜய் கிருஷ்ணா. விரைவில் அஜய் அப்பாவாக போகும் செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment