நடிகர் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கைதி. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் “போலோ”வின்ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த திரைப்படம் தான் கைதி. இது நடிகர் கார்த்திக்கின் வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இரண்டாவது படமாக இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருந்தது. 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது விஜயின் பிகில் படத்துடன் இந்த படம் வெளியாகி இருந்தது. நடிகர் கார்த்திக்கின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை இந்த படம் ஏற்படுத்தியது .அதேபோல் லோகேஷ் கனகராஜுக்கும் இது மிகப்பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்தை வாங்கி கொடுத்தது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்து இருப்பதால், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தில் ஹிந்தி ரீமேக் ஆக போலோ படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை அஜய் தேவகன் தயாரித்து நடித்துள்ளார். அஜய் உடன் சேர்த்து தபு, ராய் லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் அஜய் தேவ்கனின் அஜய் தேவகன் பிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கின்றன. இந்த படத்தை தர்மேந்திர ஷர்மா இயக்கியிருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. கைதி திரைப் படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறவில்லை. மாறாக கையில் திருசூலத்துடன் அஜய் தேவகன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் கைதி படத்தில் இல்லவே இல்லையே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இது கைதி படமா இல்லை சாமி படமா என்று தெரியவில்லை என்றும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த ட்ரைலரை நீங்களும் காண..! Watch the below video.!
YouTube Video Code Embed Credits: AJAY DEVGAN Films