சம்பவம் லோடிங்.! பாக்கியலட்சுமி சீரியல் எழிலுக்கு நடக்க இருக்கும் திருமணம்.! அமிர்தவா? வர்ஷினியா?

பாக்கியலட்சுமி தொடரில் எழிலுக்கு அமிர்தாவுடன் திருமணம் நடைபெறுமா அல்லது வர்ஷினி உடன் திருமணம் நடைபெறுமா என்று பல குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு வீடியோ ஒன்று கசிந்துள்ளது. இந்த வீடியோவை இந்த நாடகத்தில் செல்வி கதாபாத்திரத்தில் நடிக்கும் மீனா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் எழிலுக்கு திருமணம் நடைபெறும் திருமண மண்டபத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளின் அமோக ஆதரவு இருந்து வருகிறது. நமது வீட்டில் இருக்கும் அம்மாவை பிரதிபலிக்கும் கேரக்டர் என்பதால் பாக்கியலட்சுமிக்கு ரசிகர் பட்டாளம் மிகப் பெரிய அளவில் இருக்கிறது. வங்காள மொழியில் உருவான ஸ்ரீ மோயி என்ற தொடரை அப்படியே தமிழில் மறு உருவாக்கம் செய்து பாக்கியலட்சுமி என்கிற சீரியலாக ஒளிபரப்பி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் லோடிங்.! பாக்கியலட்சுமி சீரியல் எழிலுக்கு நடக்க இருக்கும் திருமணம்.! அமிர்தவா? வர்ஷினியா? 1
இந்த சீரியலின் கதையைப் பற்றி பார்த்தோம் என்றால் கதாநாயகன் கோபி அவரது மனைவி பாக்கியலட்சுமி அவருடைய இரண்டாவது மனைவி ராதிகா ஆகியோரை சுற்றி தான் கதை நகர்கிறது. கோபி முதல் மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது மனைவியுடன் தனி குடித்தனம் நடத்தி வருகிறார். முதல் மனைவி பாக்யா, கோபி கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை தானே வாங்கிக் கொள்வதாக கூறி சவால் விட்டார். ஆனால் அந்த சவாலை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு பல தடைகள் ஏற்படுகிறது. தற்போது கதைப்படி பாக்கியா அந்த வீட்டை வாங்குவதற்காக பணம் தேடி மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையே பாக்யாவின் இளைய மகன் எழில் அமிர்தா என்கிற விதவைப் பெண்ணை காதலித்து வருகிறார். ஆனால் அதற்கு அவரது பாட்டி ஈஸ்வரி அந்த காதலுக்கு எதிர்த்து நிற்கிறார். எழிலுடடன் பணி புரியும் பணக்கார வீட்டுப் பெண்ணான வர்ஷினி என்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி பாட்டி கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  சத்தமில்லாமல் காதலியுடன் திருமணத்தை முடித்த சன் டிவி சீரியல் நடிகர்.! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.!

சம்பவம் லோடிங்.! பாக்கியலட்சுமி சீரியல் எழிலுக்கு நடக்க இருக்கும் திருமணம்.! அமிர்தவா? வர்ஷினியா? 3

இந்த நிலையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் எழிலுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. திருமண மண்டபத்தில் வர்ஷினி திருமண கோலத்தில் தயாராக இருக்கிறார். அதேபோல பட்டு வேஷ்டி சட்டையுடன் மாப்பிள்ளை போல் எழிலும் தயாராக இருக்கிறார். இதனால் எழில் யாரை திருமணம் செய்து கொள்வார் என்கிற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் எழில் கண்டிப்பாக வர்ஷினையை திருமணம் செய்ய மாட்டார் என்று கமெண்ட்களில் கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment