பிரபல சின்னத்திரை நடிகை நட்சத்திரா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் அறிவித்திருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நட்சத்திரா. ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலமாக பிரபலமானார். இவர் முதலில் கிடா பூசாரி மகுடி என்கிற படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார். பின்னர் படங்களில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போன பின்பு சின்னத்திரை பக்கம் தலை காட்டத் தொடங்கினார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது யாரடி நீ மோகினி தான். இந்த நாடகத்தில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து, பல இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். கிராமத்து பெண்ணாக எதார்த்தமான நடிப்பும் அழகான முகபாவனைகளுடன் இவர் நடித்தார். இந்த நாடகத்தின் மூலமாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பல சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நட்சத்திரா.

மீண்டும் அதே தொலைக்காட்சியில் வள்ளி திருமணம் என்கிற தொடரில் நடித்து வருகிறார். நட்சத்திராவிற்கும் அவரது காதலர் விஷ்வாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. விஷ்வாவும் திரைத்துறையைச் சேர்ந்தவர் தான். நாடகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் வைத்து வரவேற்பு நடத்தப்படும் என்று அறிவித்திருந்த இவர்கள், பின்னர் சில காரணங்களால் அந்த திட்டத்தை கைவிட்டனர். சிறுவயதில் தனது தாத்தா வீட்டில் தான் வளர்ந்துள்ளார் நட்சத்திரா. தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் காரணத்தினால் நட்சத்திரத்திற்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று அவசர அவசரமாக திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இதை ஒரு வீடியோவாக வெளியிட்டு நட்சத்திராவே உறுதி செய்திருந்தார். குடும்பத்தினர் முன்னிலையில் மட்டும் திருமணம் நடைபெற்றது.

நெருங்கிய தோழிகள் கூட யாரும் தனது திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கமளித்து இருந்தார்.
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நட்சத்திரா, தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார். சில நாட்களாகவே நட்சத்திரா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அந்த செய்தியை அவரே உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்தப் புகைப்படத்திற்கு கீழே தென்றல் நாடகத்தில் நடித்த ஸ்ருதிராஜ் மற்றும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நட்சத்திராவின் ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!
